விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-ல் அளிக்கப்பட்ட செம வரவேற்பு.. நாசா வெளியிட்ட வீடியோ!
நியூயார்க்: நேற்று விண்வெளிக்கு சென்ற நாசா வீரர்கள் இருவரும் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு உள்ளே செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்று அதிகாலை 1 மணிக்கு அமெரிக்காவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து உள்ளனர். முதல்முறையாக நாசாவின் இரண்டு வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று உள்ளனர்.

நேற்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.இந்த ராக்கெட்டின் க்ரூ டிராகன் (crew dragon) தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது.
This is the first time in human history @NASA_Astronauts have entered the @Space_Station from a commercially-made spacecraft. @AstroBehnken and @Astro_Doug have finally arrived to the orbiting laboratory in @SpaceX's Dragon Endeavour spacecraft. pic.twitter.com/3t9Ogtpik4
— NASA (@NASA) May 31, 2020
நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இந்த நாசா வீரர்கள் இருவரும் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு உள்ளே செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. நாசா அமைப்பு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் மற்ற வீரர்கள் இவர்களுக்கு கொடுத்த வரவேற்பு இதில் பதிவாகி உள்ளது. இவர்கள் எத்தனை நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். முக்கியமாக இவர்களை விண்வெளிக்கு கொண்டு சென்று ஆராய்ச்சி மையத்துடன் இணைக்கும் க்ரூ டிராகன் குறித்தும் இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications