வெடித்து சிதறிய எலான் மஸ்கின் ராக்கெட்.. சுனிதா வில்லியம்ஸ் விஷயத்தில் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ நம்பலாமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று நேற்று சோதனையின்போது வெடித்து சிதறியுள்ளது. அடுத்த வாரம், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர, எலான் மஸ்க்கின் ராக்கெட்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த தோல்வி, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வெடித்து சிதறிய ராக்கெட்டின் குப்பைகள் காரணமாக, அமெரிக்காவில் 4 விமான நிலையங்களில் தற்காலிகமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

SpaceX US NASA

வெறும் 10 நாட்கள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மாதங்களாக அங்கேயே சிக்கியுள்ளார். அவரை மீட்டு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படுகிறது. இப்படி இருக்கையில், நேற்று நடந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பரிசோதனை ஒன்று தோல்வியில் முடிந்திருப்பது விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

அமெரிக்காவின் புளோரிடாவின் பஹாமாஸின் ஹாக் கேயில், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கலம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ராக்கெட் வெடித்து சிதறியிருக்கிறது. விண்வெளி குப்பைகள் காரணமாக மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், ஆர்லாண்டோ மற்றும் பாம் பீச் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. சுமார் 1 மணி நேரம் வரை விமான போக்குவரத்து இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களுக்கு வரும் விமானங்கள் அனைத்தும் மாற்று விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது. எனவே உடனடியாக தானாக அழித்துக்கொள்ளும் வகையில் செய்யப்பட்ட புரோகிராம் ஆக்டிவேட் செய்யப்பட்டு, ராக்கெட் வெடிக்கவைக்கப்பட்டது. ராக்கெட்டின் துண்டுகள் கரீபியன் கடலில் விழுந்திருக்கின்றன. இந்த தோல்வியை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறோம் என்று ஸ்பேஸ் எக்ஸ் டீம் கூறியிருக்கிறது.

வழக்கமான ராக்கெட் சோதனையில் இதுபோன்ற தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனால், விண்வெளி துறையில் நான்தான் பெரிய ஜாம்பவான் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த தவறு எப்படி ஏற்பட்டது? என்கிற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். அதேபோல, இந்த நிறுவனம்தான் அடுத்த வாரம் சுனிதாவை பூமிக்கு அழைத்துவர இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படியான விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஏற்கெனவே இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனாவை நாம் இழந்துவிட்டோம். இனியும், இதுபோன்ற மற்றொரு வீராங்கனையை இழக்க தயாராக இல்லை. எனவே, எலான் மஸ்க் இதனை கவனத்தில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+