அட, இன்னும் மைக்கேல் ஜாக்சன் சாகலைங்க.. வைரலாகும் வீடியோ.. டிஎன்ஏ சோதனை செய்யச் சொல்லும் ரசிகர்கள்!
நியூயார்க்: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அப்படியே அச்சு அசல் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் போலவே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைக்கேல் ஜாக்சனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலகமே கொண்டாடிய மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு காலமானார். ஆனால் அவர் உயிரோடு தான் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் புகைப்படம் மைக்சேல் ஜாக்சன் ரசிகர்களின் நம்பிக்கை மேலும் அதிகமாக்கியுள்ளது.

ஜெராக்ஸ்
செர்ஜியோ கோட்ஸ் எனும் பேர் கொண்ட அந்த நபர் அப்படியே அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கிறார். அவர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்களைப் பாடி அவரை போலவே நடனமாடியது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது

வைரலான வீடியோ
செர்ஜியோவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. சமூக வலைதளங்களில் இவர்தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் 2009 ஆம் ஆண்டு இறந்தவர் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்தனர். எனவே மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் செர்ஜியோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போது உண்மை வெளியில் வரும்' என வலியுறுத்தி வருகின்றனர்.

இது தான் காரணம்
இந்தப் பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செர்ஜியோவே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "நான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் இல்லை. ஒரு முறை செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்தபோது மைக்கேல் ஜாக்சன் போலவே இருப்பதால் என்னை மைக்கேல் ஜாக்சன் வேடமணிந்து பேட்டி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சோதனைக்கு தயார்
அதனால் தான் மைக்கேல் ஜாக்சன் வேடமிட்டு பேட்டி கொடுத்தேன். அந்த வீடியோ தான் வைரலாகி நான் தான் மைக்கேல் ஜாக்சன் என்று புரளியைக் கிளப்பி விட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். மேலும், ‘ரசிகர்கள் விரும்பினால் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் தயார்' என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications