F-35 எனும் தகர டப்பாவை தலையில் கட்டும் டிரம்ப்! அதுக்கு இதுவே பரவாயில்லையே! ரஷ்ய ஆஃபரை பாருங்க
நியூயார்க்: அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், ஆயுதங்களை வாங்கிக்கோங்க என டிரம்ப் பேசியிருக்கிறார். குறிப்பாக F-35 விமானம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என டிரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால் இந்த விமானத்தை விட சக்திவாய்ந்த விமானம் ரஷ்யாவிடம் இருக்கிறது. இதற்கு பதில் அதை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கலாம் என பலரும் கூற தொடங்கியுள்ளனர்.
ரஷ்யா தொடக்கத்திலிருந்து நமக்கு ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. அங்கிருந்து வாங்காமல், அமெரிக்காவிடமிருந்து வாங்குவது சரியல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

போர் விமானங்களில் இரண்டே வகைகள்தான். ஒன்று மறைந்திருந்து தாக்குவது(stealth). இன்னொன்று நேரடியாக சண்டை செய்வது(dogfighting).
1.stealth
2.dogfighting
அமெரிக்காவின் F-35 மறைந்திருந்து தாக்கும் திறன் கொண்டது. உதாரணத்திற்கு சீனா மீது குண்டு போட வேண்டும் எனில், யாருக்கும் தெரியாமல் சைலண்டாக வந்து இது குண்டு வீசிவிட்டு சென்றுவிடும். ரேடாரில் இதனை அடையாளம் காண்பது கஷ்டம். ஏனெனில் இந்த விமானத்தின் மீது ரேடாரை உறுஞ்சும் தன்மை கொண்ட உலோக கலவை பெயின்ட் மாதிரி பூசப்பட்டிருக்கும்.
பூமியிலிருந்து வரும் ரேடார் சிக்னலை வாங்கி, திரும்ப அனுப்பும். எனவே விமானத்தை கண்டுபிடிக்கவே முடியாது. நவீன போர்களில் இந்த தொழில்நுட்பம் மிக முக்கியமானது. ஆனால், நேரடி சண்டை என்று வந்துவிட்டால் F-35 விமானத்தால் தாக்குபிடிக்க முடியாது. நிச்சயம் தோல்வியை தழுவும்.
இங்குதான் ரஷ்யாவின் Su-57 கெத்து காட்டுகிறது. மறைந்து தாக்கும் திறன் இந்த விமானத்திற்கு கொஞ்சம் கம்மிதான். ஆனால், நேரடி சண்டை என்று வந்துவிட்டால் Su-57தான் கில்லி. எவ்வளவு பெரிய விமானமாக இருந்தாலும் சரி தட்டி தூக்கிவிடும். இந்த விமானத்துடன் நேருக்கு நேர் சண்டைய செய்ய உலகில் வேறு எந்த விமானத்திற்கும் திறன் கிடையாது.
F-35 மற்றும் Su-57 என இரண்டும் 5ம் தலைமுறை போர் விமானங்கள். இரண்டையும் மெயின்டெயின் செய்வது கொஞ்சம் கஷ்டம். ஏனெனில் இரண்டும் ரொம்ப காஸ்ட்லி.
F-35 விமானத்தை ஒரு மணி நேரத்திற்கு இயக்க ₹2,490,000 முதல் ₹3,320,000 வரை செலவாகும். இதுவே Su-57 விமானத்தை ஒரு மணி நேரத்திற்கு இயக்க ₹2,075,000 முதல் ₹2,905,000 வரை செலவாகும். எப்படி பார்த்தாலும் ரஷ்யாவின் Su-57 ரக விமானம்தான் எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்கிறது.
போதாத குறைக்கு, Su-57 விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனமான ரோசாபோரோனெக்ஸ்போர்ட் ஆகியவை முன்வந்தன. இதுமட்டும் கிடையாது, Su-57 விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொடுக்குவும் ரஷ்யா ரெடி என்று சொன்னது.
இதன் மூலம், இந்தியாவில் போர் விமானங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் (HAL) அடுத்தடுத்த ஆண்டுகளில் சொந்தமாக Su-57 விமானத்தை நமது நாட்டின் வானிலைக்கு ஏற்றார் போல தயார் செய்யும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!
அமெரிக்காவிடம் இந்த ஆஃபர் கிடையாது. காசு கொடு.. வாங்கிட்டுபோ! மாதிரியான டீலிங்கைதான் டிரம்ப் செய்கிறார். எனவே கோடி கோடியாக கொடுத்து எதற்கு F-35 எனும் தகர டப்பாவை வாங்க வேண்டும்? ரஷ்யாவிடம் விமானத்தை வாங்கிவிட்டு போலாமே என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications