"இடியட்" என தேடினால் ட்ரம்ப் படம் ஏன்? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம்! அதென்ன கூகுள் பாம்பிங்?
நியூயார்க்: உலக அளவில் பிரபலமான சர்ச் இன்ஜினான கூகுளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடியட் எனத் தேடினால் டொனால்ட் டிரம்ப்-ன் என புகைப்படங்கள் வந்தது உலக அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் இது தொடர்பான நீதிமன்ற விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார், google நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. தனிப்பட்ட முறையில் மனிதர்களால் மேனுவலாக இதுபோன்ற முடிவுகளை வர வைக்க முடியாது எனவும், ஆயிரக்கணக்கான மக்கள் இடியட் என்ற வார்த்தையுடன் டொனால்ட் டிரம்பின் புகைப்படத்தை இணைத்ததால் தான் அந்த முடிவுகள் வந்ததாக விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கூகுள் சர்ச்சில் நடந்த ஒரு வினோத சம்பவம் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. "Idiot" (முட்டாள்) எனும் சொல்லை கூகுள் இமேஜ் தேடலில் தட்டச்சு செய்ததும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படங்கள் முதன்மையாக தோன்றியது. இதைத் தொடர்ந்து கூகுளின் தேடல் முறைமை குறித்த கேள்விகள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க காங்கிரஸின் நீதித்துறை குழுவில் நடைபெற்ற விசாரணையின் போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். தற்போது அவரது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

டிரம்ப் கூகுள் தேடல்
கூகுள் தேடல் முடிவுகளை தனிப்பட்ட மனிதர்கள் யாரேனும் மேனுவலாக தேர்ந்தெடுக்கிறார்களா? அல்லது அனைத்தும் தொழில்நுட்பத்தால் தானாகவே நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலாக சுந்தர் பிச்சை, "கூகுள் தேடல் முறைமை முழுவதும் 'Web Crawlers' எனப்படும் மென்பொருளின் மூலம் செயல்படுகிறது. இவை கோடிக்கணக்கான இணையதளங்களைத் தேடி, அதிலிருக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களைச் சேகரித்து ஒரு பெரிய பட்டியலில் (Index) சேமித்து வைக்கும்.
இடியட் சர்ச்சை
ஒரு பயனர் கூகுளில் ஒரு சொல்லைத் தேடும்போது, அந்த பட்டியலில் இருந்து அதனுடன் மிக அதிக தொடர்புடைய மற்றும் பிரபலமான முடிவுகளை அல்கோரிதம் தானாகவே தேர்ந்தெடுத்து காட்டும். ஆனால் சில நேரங்களில் மக்கள் இணையத்தில் செய்கிற செயல்களால் முடிவுகள் எதிர்பாராத வகையில் அமையலாம். அதேபோல், "Idiot" என்ற சொல்லை கூகுளில் தேடும்போது டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் முதலில் தோன்றியது.
சுந்தர் பிச்சை
"கூகுள் எந்த தேடல் முடிவுகளையும் கைமுறையாக ( மேனுவலாக) உருவாக்கவில்லை அல்லது மாற்றவில்லை. இணையத்தில் மக்கள் என்ன பதிவிடுகிறார்கள், எந்த புகைப்படங்களுடன் எந்த வார்த்தைகளை இணைக்கிறார்கள் என்பதையே எங்கள் அல்காரிதம் பதிவு செய்கிறது. பல பயனர்கள் 'Idiot' என்ற சொல்லை ட்ரம்ப் புகைப்படத்துடன் இணைத்ததால், அதுவே தேடல் முடிவில் முதன்மையாக தோன்றியது," என்றார்.
கூகுள் அல்காரிதம்
அப்போது ஒரு நீதிபதி நகைச்சுவையாக, "அப்படியானால் கம்ப்யூட்டரின் பின்னால் ஒரு சிறிய மனிதன் உட்கார்ந்து, மக்கள் பார்க்க வேண்டியதை முடிவு செய்கிறாரா?" என்று கேட்டார். அதற்கு பிச்சை, "கடந்த ஆண்டு மட்டும் 3 டிரில்லியனுக்கும் (3 லட்சம் கோடி) மேற்பட்ட தேடல்கள் நடந்துள்ளன. இதை மனிதர்கள் மேனுவலாக செய்து முடிப்பதற்கு சாத்தியமே இல்லை," எனத் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் புகைப்படம்
முன்னதாக, கூகுள் தேடல் முடிவுகள் தனக்கு எதிராக உள்ளன என்றும், "பொய்யான செய்திகளை" ஆதரிப்பதாகவும், கூகுள் தளம் குற்றவியல் சாயலில் செயல்படுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.
கூகுள் பாம்பிங்
உண்மையில் டிரம்புக்கு நடந்தது கூகுள் பாம்பிங் ( Google Bombing ) எனப்படும் தொழில்நுட்ப அட்டாக் ஆகும். இந்த நிகழ்வு எனப்படும் ஒரு இணைய நிகழ்வின் எடுத்துக்காட்டாகும். இது என்னவெனில், அதிகமான பயனர்கள் ஒரு குறிப்பிட்ட சொல் மற்றும் ஒரு படம் அல்லது இணையப்பக்கத்தை இணைத்து பதிவிடும்போது, கூகுளின் அல்காரிதம் அதை "மிகப் பிரபலமான தொடர்பு" எனக் கருதி முடிவுகளில் முதன்மையாகக் காட்டும். இதன் மூலம், கூகுள் தளத்தின் கருத்து அல்லாமல், இணையத்தில் மக்கள் இணைந்து உருவாக்குவது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications