நாளை பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. இந்த தவறு மட்டும் நடக்கவே கூடாது
நியூயார்க்: வெறும் 10 பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், சுமார் 9 மாதங்களாக அங்கேயே சிக்கியிருக்கிறார். இந்நிலையில் அவரை மீட்க அனுப்பப்பட்ட ராக்கெட் நாளை பூமிக்கு திரும்புகிறது.
இந்த ரிட்டர்ன் பயணத்தில் சிறு தவறு நடந்தால் கூட, கல்பனாவை போல சுனிதாவை இழக்க நேரிடும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

கல்பனாவுக்கு என்ன நடந்தது?:
2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து Space Shuttle Columbia என்கிற ராக்கெட் கல்பனா உட்பட 7 விண்வெளி வீரர்களை சுமந்துக்கொண்டு விண்வெளிக்கு பறந்தது. Space Shuttle Columbia என்பது மிகவும் பாதுகாப்பான ராக்கெட். அதற்கு முன்னர் பல மிஷன்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால் கல்பனா பறந்தபோது அதில் ஒரு தவறு நடந்தது.
சிறு தவறு:
ராக்கெட்டின் வெளிப்புற எரிபொருள் டேங்கை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த ஒரு லேயரிலிருந்து சிறிய பகுதி உடைந்து விழுந்தது. இந்த லேயரை foam insulation என்று கூறுவார்கள். ராக்கெட்டில் திரவ ஹைட்ரஜனும்(-183°C), திரவ ஆக்சிஜனும்(-183°C) எரிபொருளாக நிரப்பப்பட்டிருக்கும். இந்த அளவுக்கு குளிர் தன்மை கொண்ட எரிபொருள், டேங்கை உறைய வைத்துவிடும். இதனை தடுக்கதான் foam insulation லேயர் பயன்படுத்தப்பட்டது.
தெர்மாகோல் போன்று இருக்கும் இந்த லேயர், எரிபொருள் டேங்கை உறைய விடாமலும், சூரிய வெப்பத்திலிருந்து டேங்க்கை பாதுகாக்கவும் அமைக்கப்பட்டது.
சிறு துண்டு உடைந்ததால் பிரச்சனை:
ஆனால், ஜன.16ம் தேதி ராக்கெட் வானத்தை நோக்கி பறந்தபோது, இந்த லேயரிலிருந்து ஒரு துண்டு உடைந்து ராக்கெட்டின் இடது இறக்கையில் சிக்கிக்கொண்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. ராக்கெட் பாதுகாப்பாக விண்வெளிக்கு சென்று சேர்ந்தது. அங்கு வேலையை முடித்துக்கொண்டு வீரர்கள் 7 பேரும் மீண்டும் பூமிக்கு திரும்பினர்.
ஆபத்தான கட்டம்:
விண்வெளி பயணத்தின் மிகவும் ஆபத்தான கட்டம் பூமிக்குள் ராக்கெட் நுழையும் தருணம்தான். இந்த நேரத்தில் சுமார் 25,000 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி ராக்கெட் வரும். இவ்வளவு வேகம் ராக்கெட்டை சூடாக்கும். அதன் வெப்பநிலை 2,730°F முதல் 5,430°F வரை உயரும். சாதாரணமாக சென்னையில் 100°F வெயில் பதிவானாலே நம்மால் தாங்க முடியாது. அப்படியெனில் அதை விட பல மடங்கு வெப்பத்தை வீரர்கள் எப்படி தாங்குவார்கள்? இந்த வெப்பத்தை குறைக்கும் வேலையை foam insulation லேயர் செய்யும்.
கல்பானாவின் ராக்கெட்டில்தான் இந்த லேயர் டேமேஜ் ஆகியிருந்ததே. இவர்கள் பூமிக்குள் நுழையும்போது வெப்பம் அதிகரித்ததால் லேயரில் அழுத்தம் அதிகரித்து ஒட்டை விழுந்தது. இதனால் ராக்கெட் மொத்தமாக வெடித்து சிதறியது. 7 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எனவே சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குள் நுழையும்போது அவரது ராக்கெட்டில் இதுபோன்ற எந்த கோளாறும் ஏற்படக்கூடாது. இதை எலான் மஸ்க்கின் டீம் உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
உடல் நலப்பிரச்சனை:
முன்னதாக சுனிதாவை விண்வெளிக்கு அழைத்து சென்றிருந்த போயிங் நிறுவனத்தின் ராக்கெட்டில் இதேபோன்று ஒரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. எனவேதான் சுனிதாவின் 10 நாட்கள் பயணம் 9 மாத பயணமாக மாறியது. இத்தனை நாட்கள் விண்வெளியில் இருப்பதால் ஏராளமான உடல்நலப் பிரச்சனைகளை சுனிதா எதிர்கொள்ள கூடும். ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் எலும்பு சார்ந்த பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications