16 முறை உதித்த சூரியன்.. சுனிதா வில்லியம்ஸ் பார்த்த புத்தாண்டு விடியல் இதுதான்!
நியூயார்க்: உலம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் இன்று 16 புத்தாண்டு சூரிய உதயத்தை பார்த்திருக்கிறார்.
உலகில் முதிலில் சூரிய உதயம் தெரியும் பகுதியாக கிழக்கு நியூசிலாந்து இருக்கிறது. இங்குள்ள கிரிட்டிமாட்டி எனும் தீவில் சூரிய உதயம் முதலில் தெரியும். அதன் பின்னர்தான் மற்ற பகுதிகளுக்கு தெரியும். அந்த வகையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த தீவில் உள்ள மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரிய நாடுகள், சீனா, இந்தியா என புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

அதே நேரம் சர்வதேச விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் சுமார் 16 முறை புத்தாண்டு சூரிய உதயத்தை பார்த்திருக்கிறார். அதாவது சர்வதேச விண்வெளி மையத்திலிருக்கும் அனைவராலும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் 16 முறை சூரிய உதயத்தை பார்க்க முடியும். இதற்கு காரணம் சர்வதேச விண்வெளி மையம் சுற்றும் வேகம்தான். இது மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் சுற்றினால் 90 நமிடங்களில் பூமியை ஒரு ரவுண்டு அடித்துவிடலாம்.
அதனால்தான் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் எவராலும் 16 முறை சூரிய உதயத்தை பார்த்துவிட முடியும். அப்படித்தான் சுனிதா வில்லியம்ஸும் பார்த்திருக்கிறார். அறிவியலாளர்களை பொறுத்தவரை புத்தாண்டு என்பது கற்பனைதான். அதாவது, பூமி புள்ளி A என்கிற இடத்தில் தொடங்கி, சூரியனை ஒரு சுற்று சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்வதைத்தான் புத்தாண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகளை பொறுத்த வரை பூமி எப்போதுமே A என்கிற புள்ளியை மீண்டும் வந்தடையாது என்று கூறுகின்றனர்.
இதற்கான காரணம், சூரியன் நகர்வதுதான். மணிக்கு சுமார் 8.28 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த பால்வெளி அண்டத்தை சுற்றி வருகிறது. அது நகரும்போது அத்துடன் சேர்ந்து நம்மையும் இழுத்தக்கொண்டு நகர்கிறது. அப்படி இருக்கும்போது பூமி எப்படி மீண்டும் A என்கிற புள்ளிக்கு வரும்? இந்த அண்டத்தில் வழி சொல்ல நட்சத்திரங்களைதான் பயன்படுத்துவார்கள். சூரியனை அல்ல என்பது கவனிக்கத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications