நம்ம ஊர் பொண்ணுனா சும்மாவா? விண்வெளியிலேயே மாரத்தான் ஓடிய சுனிதா வில்லியம்ஸ்! ப்பா இத்தனை சாதனைகளா?
நியூயார்க்: விண்வெளியில் அதிக நாள் பயணித்த முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் விண்வெளியிலேயே மாரத்தானில் ஈடுபட்ட முதல் நபர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ட்ரெட்மில்லில் நான்கரை மணி நேரம் ஓடி பாஸ்ட்டன் மாரத்தான் போட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்து இருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு விண்வெளியில் ட்ரையத்லான் மேற்கொண்டு சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இரண்டாவது முறையாக விண்வெளிக்குச் சென்றார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்த அவர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக பூமிக்கு திரும்ப முடியவில்லை.

பத்து நாளில் திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்தார். பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், ரஷ்யாவின் அலெக்சாண்டர் உள்ளிட்டோரை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் களம் இறங்கியது.
அந்த நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. தொடர்ந்து நேற்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஆகிய நான்கு பேரை அழைத்துக் கொண்டு டிராகன் விண்கலம் பூமியை நோக்கி வந்தது. தொடர்ந்து 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.27 மணிக்கு ப்ளோரிடா கடலில் இறங்கியது.
தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் மீட்பு குழுவினர் விண்கலத்தில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக சேர்த்து இருக்கின்றன. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்த பயணத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார். விண்வெளியில் அதிக நாட்கள் (608 நாட்கள்) கழித்து நாசாவை சேர்ந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், விண்வெளியில் ஒரே பயணத்தில் அதிக நாட்கள் கழித்து வீரர்கள் பட்டியலில் (287 நாட்கள்) 9ஆம் இடத்திலும், உலக அளவில் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த வீரர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் (608 நாட்கள்) சுனிதா வில்லியம்ஸ் உள்ளார்.
அது மட்டுமில்லாமல் விண்வெளியில் பலமுறை விண் நடை மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் விளையாட்டிலும் விண்ணில் இருந்தவாறு சாதனை படைத்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். புகழ்பெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியில் பங்கேற்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில் விண் பயணம் தாமதம் ஆனதால் விண்வெளி நிலையத்தில் இருந்தே மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதற்காக விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ட்ரெட்மிலில் சுமார் நான்கரை மணி நேரம் ஓடி பாஸ்டன் மாரத்தான் போட்டிக்காக நிர்ணயித்த தூரத்தை கடந்திருக்கிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ட்ரையத்லானும் மேற்கொண்டு இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் சிறப்பு பயிற்சிகள் பெற்று நீச்சல் அடித்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை ஓட்டி, ட்ரெட்மிலில் நடந்து ட்ரையத்லான் போட்டியை சுனிதா வில்லியம்ஸ் நிறைவு செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications