மீண்டும் விண்வெளி பயணத்தை தொடங்கும் சுனிதா வில்லியம்ஸ்! இந்த முறை பிரைவேட் ஸ்பேஸ்ஷிப்பில் செல்கிறார்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் மீண்டும் விண்வெளிக்கு பறக்க இருக்கிறார். இந்த முறை விண்வெளி ஓடத்தை சுனிதா வில்லியம்ஸ்தான் இயக்குகிறார்.

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது புகழ் பெற்ற விமானம் தயாரிப்பு நிறுவனமான போயிங், விண்வெளி ஓடத்தை தயாரித்து வருகிறது. ஸ்டார் லைனர் என்று பெயரிடப்பட்ட இந்த ஒடம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்து செல்ல இருக்கிறது.

Sunita Williams returns to space in private spaceship

இதற்கு முன்னர் வரை நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது. இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற முதல் தனியார் நிறுவனம் என்கிற பெயரை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றது.

இதனையடுத்து போயிங் நிறுவனம் இந்த பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக இந்நிறுவனம் ஸ்டார் லைனர் எனும் ஓடத்தை தயாரித்திருக்கிறது.

ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சில நாட்களுக்கு முன்னர் ஏவப்படுவதாக இருந்த இந்த ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்ல இருந்தார். இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2வது தனியார் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும்.

ஆனால் கடைசி நேரத்தில் இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. காரணம் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறுதான். இந்த தொழில்நுட்ப கோளாறு சமீபத்தில் சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த பயணம் தொடங்கப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 1-லிருந்து 5-ம் தேதிக்குள் ஸ்டார்லைனர் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு கடற்படை விமானியாவார். கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக நாசா மூலம் விண்வெளிக்கு சென்றார். அதன் பின்னர் பல முறை விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார்.

இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஸ்டார் லைனர் மூலம் பயணம் மேற்கொள்ளும் சுனிதா, தனியார் விண்கலன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இரண்டாவது குழுவை சேர்ந்தவர் என்கிற பெருமையையும் பெற இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+