விண்வெளியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்! புதிய சாதனை
நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 12 ஆண்டுகளுக்கு விண்வெளியில் நடக்க இருக்கிறார். ஜன.16ம் தேதி இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது.
இதனை தொடர்ந்து ஜன.23ம் தேதியும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடக்கிறார். இதற்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர்கள் 90 முறை விண்வெளியில் நடந்திருக்கின்றனர். சுனிதா 91 மற்றும் 92ம் முறை விண்வெளியில் நடக்கிறார்.

சுனிதா வில்லியம்ஸ் ஏன் விண்வெளியில் நடக்கிறார்?:
சர்வதேச விண்வெளி மையத்தை மேம்படுத்தும் விதமாக அவர் விண்வெளியில் நடக்கிறார். இப்படி நடக்கும்போது NICER எனும் எக்ஸ்ரே தொலைநோக்கியை சுனிதா சரி செய்கிறார். இந்த தொலைநோக்கி நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்கின்றன. சுனிதாவுடன் சக அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக்-வும் நடக்கிறார். இதனை தொடர்ந்து ஜன.23ம் தேதி இன்னொரு முறை விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் நடக்கிறார். கடைசியாக அவர் கடந்த 2013ம் ஆண்டு விண்வெளியில் நடந்தார்.
சுனிதா வில்லியம்ஸின் பயணம்:
சுனிதா வில்லியம்ஸுக்கு முன்னர் பலர் விண்வெளிக்கு பயணித்திருக்கின்றனர். அவர்களை நாசாதான் விண்வெளிக்கு கொண்டு சென்றது. ஆனால் முதல் முறை, போயிங் விமான நிறுவனம் 'ஸ்டார்லைனர்' எனும் ராக்கெட்டை தயாரித்து, அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இரண்டு பேரை அனுப்பி வைத்தது. இந்த பயணம் பல முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர்தான் சாத்தியப்பட்டது. ஆனால் அவர்கள் விண்வெளிக்கு போன பின்னரும் கூட இந்த விண்கலம் பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது, விண்வெளிக்கு சென்ற கையோடு ஓரிரு நாட்களில் அவர்கள் பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு ஸ்டார்லைனர் விண்கலம் ஒத்துழைக்கவில்லை. காரணம் விண்கலத்தின் த்ரஸ்டர் ஃபெய்லியர் ஆகிவிட்டது. இது இருந்தால்தான் விண்கலம் பூமியில் தரையிறங்கும்போது பாதுகாப்பாக இருக்க முடியும்.
சிக்கலில் சுனிதாவின் பயணம்:
விண்கலம் கோளாறு கொடுத்ததால் எதிர்பாராமல் சுனிதாவும், அவருடன் சென்ற புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டனர். எவ்வளவோ முயன்றும் விண்கலத்தை ரெடி செய்ய முடியவில்லை. எனவே சுனிதாவும், வில்மோரும் இல்லாமல் ஸ்டார்லைனர் பூமிக்கு வெறும் கையுடன் திரும்பியது. இதனையடுத்து பிப்ரவரி மாதத்தில் சுனிதாவை பூமிக்கு அழைத்துவர டெஸ்லாவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டது.
தள்ளிப்போகும் பூமிக்கு திரும்பும் பயணம்:
ஆனால் பிப்ரவரியில் கூட சுனிதா பூமிக்கு திரும்ப முடியாமல் போகலாம் என்று நாசா தெரிவித்திருக்கிறது. அநேகமாக மார்ச் மாதத்தில் சுனிதா பூமிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்னர் சுனிதா விண்வெளியில் நிகழ்த்தும் முக்கியமான சாதனையாக, விண்வெளி நடை பயணம் இருக்கும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications