Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசைந்த "சவப்பெட்டி".. திடீர்னு எழுந்து வந்த நபர்.. வாயெல்லாம் சிரிப்பு.. தெறித்து ஓடிய கூட்டம்.. ஆஹா

மணமகளுக்கு சவப்பெட்டியில் இருந்து இறங்கி வந்து சர்ப்ரைஸ் தந்துள்ளார் மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சவப்பெட்டி திடீரென அசைந்தது.. பிறகு அந்த சவப்பெட்டியில் இருந்து ஒருவர் எழுந்து நடந்து வந்தார் சிரித்துக் கொண்டே.. என்னவா இருக்கும்?

இந்தியாவில் சடலங்களை புதைக்கும்போது, கடைசி நேரத்தில் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன..

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் ஏற்படுத்திவிடும். இதுபோன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் நிறைய நிகழும்..

ரோசா

ரோசா

இப்படித்தான் ஒருமுறை, பெரு நாட்டிலும் சம்பவம் நடந்தது.. லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா.. ரோசாவுக்கு 36 வயதாகிறது.. ஒருமுறை இவரது கார் விபத்துக்குள்ளாகியது.. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டனர்.. அப்போது ரோசாவும் இன்னொரு நபரும் இறந்துவிட்டதாக பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

 சவப்பெட்டி

சவப்பெட்டி

இதனால் 2 பேருக்கும் இறுதி சடங்கு செய்ய முடிவானது.. அதற்காக சவப்பெட்டியை தயார் செய்து, அதில் ரோசா சடலத்தையும் தூக்கி வைத்தனர்.. பிறகு, சவப்பெட்டியை மூடி, கல்லறைக்கு கொண்டு வந்தனர்.. அடக்கம் செய்யலாம் என்று சவப்பெட்டியை திறக்க முயன்றபோது, சவப்பெட்டி திடீரென அசைந்தது.. பிறகு சவப்பெட்டியை எட்டி எட்டி உதைப்பது தெரிந்தது.. இதனால் அதிர்ந்து போன உறவினர்கள், சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது, ரோசா டக்கென கண்விழித்துள்ளார்.. இதனால் வெலவெலத்து போன உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்..

 அசைந்த சவப்பெட்டி

அசைந்த சவப்பெட்டி

அவர்கள் விரைந்து வந்து, சவப்பெட்டியுடனேயே ரோசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது... ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ரோசா, நிஜமாகவே இறந்துவிட்டார்.. மறுபடியும் அவரை அதே கல்லறையில் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள்.. இதுபோல் சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்த சம்பவங்கள் நம் நாட்டிலும் நடந்துள்ளன.. அமெரிக்காவிலும் சவப்பெட்டியில் இருந்து ஒருவர் எழுந்து வந்துள்ளார்.. ஒரு மணமக்களுக்கு திருமண நிகழ்ச்சி ஏற்பாடாகி கொண்டிருந்தது.. திருமணம் நடைபெறும் இடத்தில் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி இருக்கின்றனர்...

 அட்ரஸ் கல்யாணம்

அட்ரஸ் கல்யாணம்

அப்போது அந்த இடத்திற்கு ஒரு பெரிய கார் வந்து நிற்கிறது... அந்த காருக்குள் இருந்து நாலைந்து பேர் இறங்குகிறார்கள்.. அந்த காரில் இருந்து அவர்கள் ஒரு சவப்பெட்டியையும் தூக்கி வருகிறார்கள்.. சில பெண்களும், ஆண்களும் இணைந்து அந்த சவப்பெட்டியை தூக்கி கொண்டு வருகின்றனர்... இதனால் கல்யாண வீட்டில் இருந்தவர்கள் பதறிப்போய்விட்டார்கள்.. வேறு எங்கோ செல்ல வேண்டிய சடலத்தை, அட்ரஸ் மாற்றி இங்கு கொண்டு வருகிறார்களோ, அல்லது யாருக்கு என்ன ஆகிவிட்டதோ என்று டென்ஷன் ஆகிவிட்டார்கள்..

 மாப்பிள்ளை

மாப்பிள்ளை

எல்லார் முகத்திலும் கலவரம் படர்ந்துள்ளது.. ஆனால், சவப்பெட்டியை தூக்கி கொண்டு வருபவர்கள் முகத்தில் மட்டும் சோகமோ, கவலையோ எதுவுமே இல்லை. அந்த சவபெட்டியை திருமணம் நடைபெறும் இடத்திற்கு அருகேயும் கொண்டு வைக்கின்றனர்... சவப்பெட்டி லேசாக அசைகிறது.. இதனால் அங்கிருந்தவர்கள் மேலும் பதறினர்.. அடுத்த நிமிடமே, அந்த சவப்பெட்டிக்குள் இருந்து ஒருவர் எழுந்து வந்தார்.. அவர்தான் மாப்பிள்ளை.!!

 வெட்டிங் ஷூட்

வெட்டிங் ஷூட்

மணமகன் கோலத்தில் சிரித்தபடியே எழுந்து நடந்து வந்தார்.. இவ்வளவு நேரமும் மாப்பிள்ளைக்காக காத்து நின்று கொண்டிருந்த மணமகளுக்கு தூக்கி வாரிப்போட்டது.. இது போட்டோ ஷூட்டாம்.. வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என்றும், மணமகளுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என மாப்பிள்ளை நண்பர்கள் இப்படி செய்திருக்கிறார்கள்.. இந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்ததுமே எரிச்சலடைந்த நெட்டிசன்கள், வழக்கம்போல் கமெண்ட்களில் இறங்கி தூர்வாரி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+