சூர்ய வம்சம் சரத்குமாரான டிரம்ப்.. நோபல் பரிசுக்கு பதில் ஃபிஃபா அமைதி பரிசு.. ஆனந்த கண்ணீர்தான்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற முயற்சிக்கும் நிலையில், அவருக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் அவருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஃபிஃபா அமைதி பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா சார்பில் டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இதை வாங்கிய உடன் மேடையில் டொனால்ட் டிரம்ப் மனம் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடிக்காத குறையாக ஆதங்கத்துடன் தனது பெருமைகளை பேசினார்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் ஃபிஃபா அமைதி பரிசைப் பெற்றுள்ளார். ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ இந்த ஆண்டு முதல் முறையாக ஃபிஃபா அமைதி பரிசு விருதினை அறிமுகப்படுத்தியுள்ளார், இது "அமைதிக்காக விதிவிலக்கான மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை எடுத்த" மற்றும் "உலகம் முழுவதும் மக்களை ஒன்றிணைத்ததற்காக டிரம்புக்கு வாங்கப்பட்டுள்ளது.

ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோவும், அமெரிக்க அதிபர் டிரம்பும் நெருக்கமாக நட்பு பாராட்டுபவர் ஆவார். இவர் தான் டிரம்புடன் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். டிரம்பின் நீண்ட நாள் ஏக்கம் என்பது அமைதிக்கான நோபல் பரிசு பெற வேண்டும் என்பது தான். ஆனால் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் தனது அருமை நண்பரான ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோவின் கையால் ஃபிஃபா அமைதி பரிசினை வாங்கினார். வாஷிங்கடன் டிசி நகரில் நடந்த விழாவில் இந்த விருந்து வழங்கப்பட்டுள்ளது. தங்க கோப்பையும், சான்றிதழும் டிரம்ப் கைகளில் வாங்கியதுமே, ஆனந்த கண்ணீர்வடிக்காத குறை தான். மிகவும் பூரித்து போனார்.
தொடர்ந்து விழாவில் டிரம்ப் பேசுகையில், "இது உண்மையில் என் வாழ்க்கையின் மிகச்சிறந்த கௌரவங்களில் ஒன்றாகும், மேலும் விருதுகளைத் தாண்டி, நான் காங்கோ குடியரசில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை காப்பாற்றினேன். இதேபோல் இந்தியா-பாகிஸ்தானை போரை முடிவுக்கு கொண்டு வந்தேன்.
இப்படி என்னால் பலவேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது, சில சமயங்களில், அந்த போர்கள் தொடங்குவதற்குச் சற்று முன்பாகவும், சில போர்கள் சரியாக அவை தொடங்குவதற்கு முன்பாகவும் முடிவுக்கு கொண்டு வந்தேன்.. சில போர்கள் முடிவுக்கு வர தாமதமாகிவிடும் போலிருந்தது, ஆனால் நான் அவற்றை சரியாக செய்து முடிவுக்கு கொண்டு வந்தேன்.. உலகம் இப்போது பாதுகாப்பான இடமாக மாறிவிட்டது. ஒரு வருடம் முன்பு அமெரிக்கா நன்றாக இல்லை; இப்போது நாம் உலகின் மிகவும் உற்சாகமான நாடாக இருக்கிறோம்" என்றார்.
#WATCH | On receiving the inaugural FIFA Peace Prize, US President Donald Trump says, "...This is truly one of the great honours of my life and beyond awards, we saved millions and millions of lives. The Democratic Republic of the Congo, as an example, over 10 million people… pic.twitter.com/Q9I5pUlAWc
— ANI (@ANI) December 5, 2025
-
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications