யார்ரா அந்த பையன்.. நான்தான் அந்த பையன்! எலான் மஸ்க் இவ்வளவு மூளைக்காரரா? இதை கொஞ்சம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஜெயிக்க தீயாய் வேலை பார்த்த எலான் மஸ்கின், கல்லூரி ஹோம் ஹொர்க் நோட்டு தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதில் அவர் எழுதியுள்ள கணக்குகள் தலையை சுற்றும் அளவுக்கு சிக்கலானதாக இருப்பதாக பலரும் கமென்ட் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரும் பணக்காரர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சிஇஓ, அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்பின் நெருங்கிய நண்பர் என பல்வேறு அடையாளங்கள் எலான் மஸ்குக்கு இருக்கின்றன. பணக்கார் ஆகவும், ஒரு நிறுவனத்தின் சிஇஓ-வாக ஆகவும் உங்கள் பெற்றோர் பெரும் கோடீஸ்வரராக இருந்தால் போதுமானது. ஆனால் தேர்தலில் ஜெயிப்பது, மக்களின் எண்ணங்களை தனக்கு ஏற்றார்போல மாற்றுவது என்பது கடினமான வேலை.

elon musk usa

இதை சரியான வேலைக்காரனால்தான் செய்ய முடியும். அதற்கு பல்வேறு திறமைகள் அவசியம். இதனை மஸ்க் கச்சிதமாக செய்துக்காட்டி தன்னை சிறந்த வேலைக்காரன் என்பதை நிரூபித்துவிட்டார்.

அமெரிக்க தேர்தலில், ட்ரம்ப் வெற்றிக்கு மஸ்க் செய்த வேலைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. மக்கள் மனதை மாற்றுவதற்காக அவர் டிவிட்டர் எனும் x தளத்தை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். அதில், ட்ரம்புக்கு ஆதரவாக இவரே தனது சொந்த அக்கவுண்டிலிருந்து போஸ்ட்டுகளை போட்டியிருந்தார். மறுபுறம் தேர்தலுக்கான செலவையும் அவர் ஏற்றிருந்தார். இதை அனைத்தையும் மஸ்க் தெளிவாக திட்டமிட்டு செய்திருந்தார். பலன் தேர்தல் வெற்றி.. வெற்றி குறித்து ட்ரம்ப்பை பாராட்டியவர்களை விட, எலானை பாராட்டியவர்கள்தான் அதிகம்.

இப்பவே இவ்வளவு மூளைக்காரராக இருந்திருக்கிறாரே! காலேஜ் படிக்கும்போது எப்படி இருந்திருப்பார்? என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கான விளக்கத்தைதான் சமீபத்திய சோஷியல் மீடியா போஸ்ட்டுகள் கொடுத்துள்ளன. அதாவது, எலான் மஸ்க்கின் காலேஜ் ஹோம் ஹொர்க் நோட்டின் சில பக்கங்கள் x தளத்தில் ஷேராகியுள்ளன.

இவை அனைத்தும் தன்னுடையதுதான் என்றும், சில பக்கங்கள் விடுபட்டிருக்கின்றன எனவும் எலான் மஸ்க் ஒப்புக்கொண்டிருக்கிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக்கொண்டிந்தபோது 'derivation of moments of inertia from first principles' என்பது குறித்து கணக்கை போட்டிருக்கிறார். அதனுடைய பக்கங்கள்தான் தற்போது வெளியாகியுள்ளன.

பலரும் இந்த ஹோம் ஹொர்க் நோட்டை பார்த்துவிட்டு, “யார்ரா அந்த பையன்! நான்தான் அந்த பையன்” என்று கமென்ட் செய்து வருகின்றனர். என்ன மக்களே நீங்கள் கல்லூரி காலத்தில் போட்ட கணக்கு நோட்டை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+