Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் முடிவால்.. தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்.. விக்கித்து பார்த்த சீனா, வியட்நாம்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து ஐபோன்களையும் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மொத்தமாக உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக போர் காரணமாக மொத்தமாக சீனா, வியட்நாம் நாடுகளில் இருந்து உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா வியட்நாம் மீது 46 சதவிகிதம் வரிகளை விதிக்கிறது. இது இந்தியா மீது விதிக்கப்படும் 10 சதவிகிதம் வரிகளை விட குறைவு. அதோடு சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் .

Tamil Nadu IPhone manufacting will be increase as apple plans to shift from China Vietnam

சீனா, வியட்நாம்

இதனால் சீனா, வியட்நாம் நாடுகளில் செய்யப்படும் உற்பத்திகள் இந்தியா நோக்கி வர தொடங்கி உள்ளன. இதனால் அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து ஐபோன்களையும் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மொத்தமாக உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக போர் காரணமாக மொத்தமாக சீனா, வியட்நாம் நாடுகளில் இருந்து உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனால் நேரடியாக தமிழ்நாடுதான் பலன் அடையும். ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே சிறப்பான ஆப்பிள் உற்பத்தி சிஸ்டம் உள்ளது. ஏற்கனவே FY25 இல் இந்திய மாநிலங்களில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

1. தமிழ்நாடு: $14.65 பில்லியன்
2. கர்நாடகா: $7.85 பில்லியன்
3. உத்தரப்பிரதேசம்: $5.26 பில்லியன்
4. மகாராஷ்டிரா: $3.51 பில்லியன்
5. குஜராத்: $1.85 பில்லியன்
6. தெலுங்கானா: $641.5 மில்லியன்
7. ஆந்திரப் பிரதேசம்: $387.3 மில்லியன்

2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து 3வது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாடு சாதித்தது எப்படி?

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஐபோன் உற்பத்தி இதற்கு முக்கிய காரணம் ஆகும். டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள். டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+