இந்தியாவின் பிபிஓ துறைக்கே செக்.. ஐடி துறையை காவு வாங்கும் டிரம்ப்.. அமெரிக்கா பகீர் பிளான!
நியூயார்க்: அமெரிக்காவில் வலதுசாரி கருத்துடைய விமர்சகர்கள், இந்தியாவுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் குடிவரவு போன்றவற்றை மையப்படுத்தி இந்த விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்தியத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் "கால் சென்டர்களை" குறிவைத்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் கால் சென்டர்களை திறக்க அனுமதிக்க கூடாது. அதோடு அவர்களின் ஐடி ஏற்றுமதிக்கு கடும் வரி விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவின் ஐடி துறை ஏற்றுமதிகளுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்தியா அமெரிக்கா மோதல்
அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வரி விதித்த பிறகு, தற்போது அதன் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது வரி விதிக்க பரிசீலித்து வருகிறது. வெளிநாட்டு ரிமோட் பணியாளர்களுக்கு வரி விதிக்கும் இச்செயல், இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முக்கியமான H-1B விசா திட்டத்தின் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நிலைக்கு மையமான ஒரு துறையை அச்சுறுத்துவதாக உள்ளது.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இந்தக் கருத்துகளை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளரும், டேர்னிங் பாயிண்ட் USA நிறுவனருமான சார்லி கிர்க் உடனடியாக வழிமொழிந்துள்ளார். இந்திய நிபுணர்கள் அமெரிக்கத் தொழிலாளர்களின் இடத்தைப் பிடித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2024 அமெரிக்கத் தேர்தலில் இந்திய-அமெரிக்க வாக்காளர்கள் கணிசமான அளவில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு டிரம்பிற்கு ஆதரவு தருவது இல்லை. இதனால் டிரம்ப் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளன.
தீவிர வலதுசாரி விமர்சகர் ஜாக் போசோபியெக், இந்தியாவின் அவுட்சோர்சிங் தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும் துறைகளுக்கு பெரும் வரிகளை விதிக்கக் கோரினார். "கால் சென்டர்களுக்கு வரி போடுங்கள். எல்லாவற்றுக்கும். அனைத்து வெளிநாட்டு கால் சென்டர்களுக்கும் வெளிநாட்டு ரிமோட் தொழிலாளர்களுக்கும் 100% வரி விதிக்கவும்," என்று அவர் இரண்டு தனித்தனிப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வலதுசாரி கருத்துடைய விமர்சகர்கள், இந்தியாவுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் குடிவரவு போன்றவற்றை மையப்படுத்தி இந்த விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்தியா ஐடி துறை டிரம்ப்
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது வரி விதிக்க பரிசீலித்து வருகிறது. இந்தியப் பொருட்களின் மீது கடும் கட்டணங்களை விதித்த பிறகு, அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப சேவைகள், வெளிநாட்டு ரிமோட் பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் வணிக செயல்முறைகள் மீது வரி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை, ஐடி துறையை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஐடி துறை பாதிக்கும்
இந்த புதிய வரி விதிப்பு, H-1B விசா அமைப்பை மாற்றியமைக்கும் திட்டங்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், தற்காலிக விசா பணியாளர்கள் அனுப்பும் பணம் மீதான அதிகரித்த வரி விதிப்பு ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய பொறியாளர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்கக்கூடும். இவர்கள் சிலிக்கான் வேலி மற்றும் அமெரிக்காவில் உள்ள ITES துறையை ஆதரிக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகியவை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. உலக அளவில் வர்த்தக போர் காரணமாக பொருளாதாரம் சார்ந்துள்ள நிலையில் இந்தியாவின் ஐடி நிறுவனங்களும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications