லைனை கிராஸ் பண்ணிட்டாரே.. இந்தியாவிடம் விடாமல் அத்துமீறும் டிரம்ப்.. இந்த 10 விஷயத்தை கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் அரசியலில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்வரும் 10 விஷயங்கள் இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக மாறி உள்ளது.

1. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

Donald Trump USA

இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.

2. இந்தியப் பொருட்களின் இறக்குமதி வரிகளை அமெரிக்க நிர்வாகம் இரு மடங்காக உயர்த்தியதை அடுத்து, கட்டண தகராறு தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் மோதல் போக்கை நிறுத்தி, பேச்சுவார்த்தை மீண்டும் தொடருமா என்று கேட்டபோது, "இல்லை, இந்தியா உடன் உள்ள மோதல் தீர்க்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை" என்று அவர் பதிலளித்தார்.

3. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. அதேபோன்று, ரஷ்யாவுடனும் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வர்த்தகம் இல்லை. ஆகவே, இப்போது இருப்பது இப்படியே இருக்கட்டும். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடேவ் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர் ஆபத்தான பாதையில் செல்கிறார்.. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

4. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் கூக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், நேற்று டிம் கூக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் காட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.

5. இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம். நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம்.
ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

6. இந்தியா தனது இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. 100% குறைக்கவில்லை என்றால் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறி உள்ளார்.

7. அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான்என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

8. இந்திய அமெரிக்கா போர் பற்றி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில்பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம், என்று கூறினார்.

9. சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள்., என்று கூறி உள்ளார்.

10. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித் பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்தியவெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+