மனிதர்கள் போகவே கூடாத கிரகம் இது.. இயற்கையே தலைகீழாய் மாறிய இடம்! விஞ்ஞானிகள் ஷாக்
நியூயார்க்: நமது பூமி எப்போதாவது அழிந்து போனால், மாற்று இடத்திற்கு நாம் போய்தான் ஆக வேண்டும். மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட கிரகங்கள் இந்த பிரபஞ்சத்தில் கொஞ்சம் இருந்தாலும், மனிதர்கள் போகவே கூடாத கிரகங்கள் நிறைய இருக்கின்றன. அப்படியான கிரகங்களின் லிஸ்ட்டில் இருப்பதுதான் இந்த TOI-5205 b.
அப்படி என்னதான் இருக்கு இந்த கிரகத்துல என கேட்க தோன்றலாம். உண்மையில் அங்கு ஒன்னுமே இல்லை என்பதால்தான் விஞ்ஞானிகள் பயந்திருக்கின்றனர்.

நம்முடைய சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகம் வியாழன் கோள்தான். ஆனால் என்ன பிரயோஜனம்? அதில் எதுவுமே கிடையாது. வெறும் காற்று மட்டும்தான் இருக்கிறது. தரை கூட கிடையாது. எனவே பெரியதாக இருந்தாலும் அதனால் எந்த யூஸும் இல்லை. அதேபோல TOI-5205 b கிரகமும் முழுக்க முழுக்க வாயுக்களால்தான் நிரம்பியிருக்கிறது.
பொதுவாக ஒரு நட்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிரகங்கள் ஒரே மாதிரியான தனிமங்களைக் கொண்டிருக்கும். ஆனால், இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன் மற்றும் ஆக்சிஜன் போன்ற கனமான தனிமங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆய்வின்படி, இந்தக் கோள் உருவாகும் போதே கார்பன், ஆக்சிஜன் போன்ற கனமான தனிமங்கள் அதன் மையப்பகுதிக்கு உள்ளே மூழ்கிவிட்டன. இதனால் மேலடுக்கில் உள்ள வளிமண்டலத்தில் இவை இல்லாமல் போய்விட்டன.
இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், அதன் ஒட்டுமொத்த வளிமண்டலம் ஆக்சிஜன் குறைவாகவும், கார்பன் அதிகமாகவும் இருக்கும் ஒரு வினோதமான சூழலைக் கொண்டுள்ளது. இது போன்ற ஒரு சூழலை இதற்கு முன்பு வானியலாளர்கள் பார்த்ததே இல்லை.
மட்டுமல்லாது நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அங்கு நிலவும் அதீத வெப்பம் மற்றும் கதிர்வீச்சு எந்தவொரு உயிரியல் மூலக்கூறுகளையும் சிதைத்துவிடும். எனவே இந்த கிரகத்தில் மனிதர்கள் மட்டுமல்லா எந்த ஒரு உயிரினமும் வாழவே முடியாது.
அதேபோல இந்த கிரகத்தின் வடிவம் விஞ்ஞானிகளை பயங்கரமாக குழப்பி வருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும், சூரியனின் எடை மற்றும் சைஸை விட குறைவான சைஸில்தான் கிரகங்கள் இருக்கும். புரியும்படி சொல்வதெனில், பிரவசத்தின் போது பிறக்கும் குழந்தை தாயை விட எடை மற்றும் அளவில் குறைவாக இருக்கும். ஆனால், குழந்தை தாயை விட பல மடங்கு பெரியதாக இருப்பதை போல TOI-5205 b விஷயத்தில் நடந்திருக்கிறது.
இந்த கிரகம் அதன் சூரியனை விட பெரிய சைஸில் இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்த விஞ்ஞானிகள் பார்த்ததே கிடையாது. இதுதான் முதல்முறை. எனவேதான் இது எப்படி சாத்தியம் என விஞ்ஞானிகள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
