ஆயுதங்களை உடனே திருப்பி அனுப்புங்கள்.. இல்லையென்றால்.. எச்சரித்த டிரம்ப்.. பதிலடி தந்த தாலிபான்!
நியூயார்க்: அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய போது விட்டுச்சென்ற ஆயுதங்களுக்கான நிவாரணத்தை வழங்க தாலிபான்களிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி 2021ல் தாலிபான் கைப்பற்றிய 7 பில்லியன் டாலர் அமெரிக்க ராணுவ உபகரணங்களைத் திருப்பித் தருமாறு அல்லது அதற்கான தொகையை தருமாறு டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் டிரம்பின் இந்த கோரிக்கையை தலிபான் நிராகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக அமெரிக்கா நடத்திய மிக நீண்ட போர் 2021ல் முடிவிற்கு வந்தது. 2020ம் வருடம் கத்தாரில் அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் படைக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தாலிபான் தீவிரவாத தாக்குதல்களை நிறுத்துவதாக இருந்தால், செப்டம்பர் 11, 2021க்குள் அமெரிக்கா படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது.

ஒவ்வொரு ராணுவ தளத்தில் இருந்தும் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அதை தாலிபான் உடனே கைப்பற்றியது. அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாலிபான் படைகள் ஆப்கனில் நகரங்களை மீண்டும் கைப்பற்றியது. அதோடு ஆட்சியை பிடித்தது. இப்போது அங்கே தாலிபான் ஆட்சிதான் நடக்கிறது.
அதோடு அமெரிக்க படைகள் செல்லும் போது மொத்தமாக அனைத்து ஆயுதங்களை எடுத்து செல்லவில்லை. சில நவீன துப்பாக்கிகள், குண்டுகளை மட்டுமே அமெரிக்க படை தங்கள் நாட்டிற்கு மீண்டும் எடுத்து சென்றன. மாறாக மற்ற துப்பாக்கிகள், குண்டுகள், ஜீப்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிலேயே அமெரிக்க படை விட்டு சென்றன. இந்த ஆயுதங்களை கைப்பற்றிய தாலிபான் படைகள் இதை வைத்தே ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகளை மிரட்டி.. ராணுவத்தை ஓடவிட்டு தற்போது ஆட்சி நடத்தி வருகிறது.
அந்த ஆயுதங்களை இப்போதும் தாலிபான் பயன்படுத்தி வருகிறது.
கோரிக்கை நிராகரிப்பு:
அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய போது விட்டுச்சென்ற ஆயுதங்களுக்கான நிவாரணத்தை வழங்கப்படும் தாலிபான்களிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். அவை எல்லாம் அமெரிக்க தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள். அவை ஒப்பந்தத்தின்படி எங்களுக்கு மீண்டும் அளிக்கப்பட வேண்டும்.
எங்கள் ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. அதனால் அதை திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படி 2021ல் தாலிபான் கைப்பற்றிய 7 பில்லியன் டாலர் அமெரிக்க ராணுவ உபகரணங்களைத் திருப்பித் தருமாறு அல்லது அதற்கான தொகையை தருமாறு டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் டிரம்பின் இந்த கோரிக்கையை தலிபான் நிராகரித்துள்ளது.
அமெரிக்கா கேட்கும் ஆயுதங்களை திருப்பி வழங்க முடியாது.. அதோடு அமெரிக்கா கேட்கும் தொகையை திருப்பி வழங்க முடியாது என்று டிரம்ப் நிராகரித்து உள்ளார். ஆப்கானிஸ்தான் அமெரிக்காவில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ஹெலிகாப்டர் தொடங்கி பலவற்றை கைப்பற்றியது. அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பிடன் ஆட்சியில் இந்த மோசமான சம்பவங்கள் நடந்தன. டிரம்ப் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் பிடன் ஆட்சியில்தான் படைகள் பின்வாங்கின. அமெரிக்க படைகள் பின்வாங்கிய முறை, விதம் சரியாக இல்லை, பிடன் இதில் சொதப்பிவிட்டார் என்று டிரம்ப் அப்போதே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications