நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிர்ச்சி.. அமெரிக்காவின் கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்கம்?

இந்திய ரூபாயை அமெரிக்கா தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்க வாய்ப்பு- வீடியோ

    நியூயார்க்: இந்திய ரூபாயை அமெரிக்கா தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது.

    இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது.

    இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளது.

    [ஆதாருக்கு பதில் வேறு ''ப்ரூப்'' வேண்டும்.. 50 கோடி பேருக்கு செக்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி! ]

    என்ன லிஸ்ட்?

    என்ன லிஸ்ட்?

    அமெரிக்காவின் ''டிரேஷரி டிபார்ட்மென்ட்'' உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை ''கண்காணிப்பு லிஸ்டில்'' வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த பணத்தின் சர்வதேச மதிப்பை, தாக்கத்தை வைத்து இது லிஸ்டில் சேர்க்கப்படும்.

    எந்த மாதிரியான நாடுகள்

    எந்த மாதிரியான நாடுகள்

    வலிமையான பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் இருக்கும். சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பணம் அமெரிக்காவின் இந்த லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் தற்போது இந்த லிஸ்டில் உள்ளது. முன்பு இந்திய ரூபாய் மதிப்பு வேகமாக வளர்ந்த காரணத்தால், இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டது.

    ரூபாய் மோசம்

    ரூபாய் மோசம்

    ஆனால் கடந்த சில நாட்களாக, இந்திய ரூபாய் வரிசையாக குறைந்து கொண்டே வந்தது. மிக முக்கியமாக ஜிஎஸ்டி வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. மிக முக்கியமாக கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாய் மதிப்பு அடிக்கடி 73 ரூபாயை தாண்டி சென்று கொண்டுள்ளது.

    பெரிய அவமானம்

    பெரிய அவமானம்

    இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை பார்ப்போம், அதற்குள் ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை லிஸ்டில் இருந்து நீக்கிவிடுவோம் என்றுள்ளனர். இது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    English summary
    The US may remove Indian rupee from Currency Monitoring list of trading partners.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X