நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கர்களை கொல்ல ஜீப்பில் சென்றார்.. கதையை முடித்தோம்.. ஈரான் தாக்குதலை விளக்கும் பென்டகன்!

ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அமெரிக்கர்களை கொலை செய்வதற்காக சென்று கொண்டு இருந்தார், அப்போதுதான் அவர் மீது டிரோன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump warns Iran | ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

    நியூயார்க்: ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அமெரிக்கர்களை கொலை செய்வதற்காக சென்று கொண்டு இருந்தார், அப்போதுதான் அவர் மீது டிரோன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

    ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை உச்சத்தை அடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த சண்டை மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

    தற்போது ஈரான் மீது அமெரிக்க டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றும், இன்றும் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை மொத்தம் 14 முக்கிய ஈரான் தலைவர்கள் பலியாகி உள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த தாக்குதலுக்கு முன் என்ன நடந்தது அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அதன்படி ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு அமைப்புகளை சந்திக்கத்தான் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி சென்றுள்ளார்.

    விளக்கம் தந்தது

    விளக்கம் தந்தது

    இவருடன் அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இவர் ஈரானின் உளவு அமைப்பின் கிங் என்று அழைக்கப்படுகிறார். இவர்கள் இருவரும் ஈரானில் பாக்தாத்தில் ரகசிய இடத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த இருந்தனர்.

    ரகசியம் என்ன

    ரகசியம் என்ன

    இதில் ஈரானில் இருந்து முக்கிய தலைவர்கள் சிலரும் வந்துள்ளனர். இவர்களை ரகசிய விருந்தாளிகள் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது. சீக்ரெட் ஏஜென்ட் ஒருவர் கொடுத்த தகவல் மூலம், அமெரிக்கா இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. இவர்கள் பாக்தாத் ஏர்போட்டில் இருந்து இரண்டு ஜீப்பில் சென்றுள்ளனர்.

    என்ன பயணம்

    என்ன பயணம்

    இவர்கள் பாக்தாத்தில் இருக்கும் சிஐஏ அதிகாரிகள், உளவு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் என்று எல்லோரையும் கைது செய்து, அங்கிருந்து ஈரான் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. சிலரை கொலை செய்யவும் சுலைமானி திட்டமிட்டு இருந்தார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக ஜீப்பில் பயணித்துள்ளனர்.

    ராக்கெட் தாக்குதல்

    ராக்கெட் தாக்குதல்

    இதை தடுக்கும் பொருட்டுதான் அமெரிக்கா உடனடியாக அந்த ராக்கெட் தாக்குதலை செய்தது. டிரோன் மூலம் ராக்கெட்டை வீசி தாக்கி உள்ளது. உளவுத் தகவல் கிடைத்ததும், அமெரிக்கா தனது டிரோன்களை பாக்தாத் பக்கம் நகர்த்தி அவசரமாக தாக்குதல் நடத்தியது. அவசரம் கருதி அமெரிக்காவின் காங்கிரசுக்கு கூட இதையே அதிபர் டிரம்ப் அறிவிக்காமல் அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுலைமானி எப்படி

    சுலைமானி எப்படி

    ஒருவேளை இந்த தாக்குதல் நடக்கவில்லை என்றால் சுலைமானி அமெரிக்கர்களை சிறைப்பிடித்து அழைத்து சென்று இருப்பார். அது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையை உருவாக்கி இருக்கும் என்று அமெரிக்கா வாதம் வைத்துள்ளது. ஆனால் என்ன இருந்தாலும் தற்போது மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அளவிற்கு அதை விட பெரிய பிரச்சனை உருவாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The USA explains why it attacked Qasem Soleimani with drone yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X