ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 திருமணத்தை மீறிய உறவு! பெண் மோகத்தால் பதவியை இழந்த ஜென்சன் ஹுவாங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், அடுத்தடுத்து வெளியான மூன்று திருமணத்தை மீறிய உறவு சர்ச்சைகளால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

63 வயதான ஜென்சன் ஹுவாங், தனது நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு பெண் ஊழியருடனும் நெருக்கமான உறவில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nvidia CEO Jensen Huang

வெளியான மூன்று ரகசிய உறவுகள்

கடந்த சில நாட்களாகவே ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் பெரும் புயலைக் கிளப்பி வருகின்றன. முதலில், ஆலிஸ் ஹுவாங் என்ற சீனப் பெண் தொழிலதிபருடன் ஜென்சன் ஹுவாங்கிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் சீனாவின் உளவாளியாக இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ தயாரித்த ரகசிய குறிப்பின்படி, ஆலிஸ் ஹுவாங் சீனாவின் உளவுத் துறையான 'எம்எஸ்எஸ்' அமைப்பால் தொடர்பு கொள்ளப்பட்டு, நிவிடியா தலைமை அதிகாரியுடன் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி தகவல்களைத் திரட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது.

அமெரிக்க அரசு, சீனாவின் ராணுவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுப்படுத்தும் நோக்கில், அதிநவீன ஏஐ கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட மெகாஸ்பீட் நிறுவனம் மூலம் விதிமுறைகளை மீறி, இந்த அதிநவீன சிப்கள் மறைமுகமாக சீனாவுக்கு அனுப்பப்பட்டதா என்ற விசாரணையை அமெரிக்க அரசு அமைப்புகள் ஏற்கனவே நடத்தி வருகின்றன. அதாவது இந்த நபரை பயன்படுத்தி சீனா சிப்புகளையும், அதன் தொழில்நுட்பங்களையும் பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா கடந்த 2-3 ஆண்டுளாக திட்டமிட்டு இந்த உளவுப்பணியை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர் சர்ச்சைகள்

இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியது. இதையடுத்து, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தனது தவறை ஒப்புக்கொண்ட ஜென்சன், தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இரண்டாவது உறவு குறித்த தகவலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவராக இருக்கும் கிம்பர்லி பவல் என்பவருடன் ஜென்சன் நெருக்கமாக இருந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டது.

இருவருமே திருமணமானவர்கள். கடந்த மார்ச் மாதம் கலிபோர்னியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, ஹோட்டலில் இருவரும் நெருக்கமாக இருந்ததை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்ததாகவும், உடனே ஜென்சனின் பாதுகாவலர்கள் அந்த நபரிடம் இருந்து வீடியோவை வெளியிடக் கூடாது என ஒப்பந்தம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மூன்றாவதாக, என்விடியா நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு பெண் ஊழியருடனும் ஜென்சன் ஹுவாங்கிற்கு நெருக்கமான உறவு இருந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பெண்ணின் பெயரை ராய்ட்டர்ஸ் வெளியிடவில்லை.

பதவி விலகலும் பங்குச்சந்தை சரிவும்

பொதுவாக, பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுடன் தனிப்பட்ட உறவு வைத்துக்கொள்வது நிறுவனத்தின் விதிகளுக்கு எதிரானது. ஒரே நேரத்தில் மூன்று சர்ச்சைகள் வெடித்ததால், என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இதன் காரணமாக, 1993-ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தைத் தொடங்கி, 33 ஆண்டுகளாக அதை உலகின் உச்சத்திற்குக் கொண்டு சென்ற ஜென்சன் ஹுவாங், நேற்று (வியாழக்கிழமை) தனது சிஇஓ பதவியிலிருந்தும், இயக்குநர் குழுவிலிருந்தும் உடனடியாக விலகினார்.

ஜென்சன் விலகிய செய்தி வெளியானதும் பங்குச்சந்தையில் என்விடியா பங்குகளின் விலை சுமார் 14 சதவீதம் வரை சரிந்தது. இதனால் நிறுவனத்திற்குப் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

அடுத்தது என்ன?

என்விடியா நிறுவனத்தின் புதிய நிரந்தர சிஇஓ தேர்ந்தெடுக்கப்படும் வரை, அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-வாகப் பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், நம் நிறுவனம் மிகவும் கடினமான காலகட்டத்தைச் சந்தித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். வரும் நவம்பர் 18-ஆம் தேதி நிறுவனத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மறுபுறம், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான உறவு குறித்து அமெரிக்க எஃப்.பி.ஐ மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக நவம்பர் 18-ஆம் தேதி ஜென்சன் ஹுவாங்கிற்கு சம்மன் அனுப்பவும் அமெரிக்க எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், என்விடியாவின் அடுத்த சிஇஓ-வாக ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிம் குக் நியமிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் முகமாகப் பார்க்கப்பட்ட ஜென்சன் ஹுவாங், தனிப்பட்ட ஒழுக்கத்தால் தனது 33 ஆண்டுகால சாம்ராஜ்யத்திலிருந்து வெளியேறியிருப்பது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+