திடீர் திடீர்னு வந்த சூறாவளி..ஒரே நாளில் 6 மாகாணங்களில் வீசிய கடும்புயல்..அமெரிக்காவில் 110 பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளி காரணமாக 110 பேர் உயிரிழந்துள்ளனர்
நியூயார்க்: அமெரிக்காவை தாக்கிய புயலால் ஒரே மாகாணங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, இதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல்கள், சூறாவளிகள் அடிக்கடி வீசியும் தாக்கியும் வருகின்றன.. பருவநிலை மாற்றம் காரணமாக இத்தகைய இயற்கை சீற்றம் அங்கு காணப்படுகிறது.
இதன்காரணமாக, அதிகளவு உயிர் சேதத்தையும், பொருட்சேதங்களையும் அவை ஏற்படுத்தி வருகின்றன.. நேற்று முன்தினம் ஒரே இரவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த சூறாவளிகள் அமெரிக்காவின் 6 மாகாணங்களை தாக்கின..

6 மாகாணங்கள்
இந்த 6 மாகாணங்களுமே உருக்குலைந்துவிட்டன... அளவுக்கு அதிகமான சேதம் ஏற்பட்டது.. அதாவது தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, இல்லினாய்ஸ், டென்னிசி, ஆர்கன்சாஸ், மிசூரி மற்றும் மிசிசிப்பி ஆகிய 6 மாகாணங்களை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை அடுத்தடுத்து சூறாவளிகள் வீசியுள்ளன.. கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் 6 மாகாணங்களை தாக்கின.. இதனால், வரலாறு காணாத பாதிப்பு அங்கு ஏற்பட்டுள்ளது..

ஃபேக்டரிகள்
குறிப்பாக கென்டக்கி மாகாணம் உருத்தெறியாமல் சிதைந்துவிட்டது.. இங்கு மணிக்கு 361 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று சுழன்று அடித்ததாக கூறப்படுகிறது... இதனா, அங்குள்ள மெழுகுவர்த்தி ஃபேக்டரி ஒன்று இடிந்து விழுந்துள்ளது.. அளவுக்கு அதிகமான உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.. எப்படியும் இந்த மாகாணத்தில் மட்டும் 50-க்கும் மேலானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கருததப்பட்ட நிலையில், 70-க்கும் மேற்பட்டோர் சூறாவளியால் உயிரிழந்துள்ளனர்

இரங்கல்
அதே போல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் ஃபேக்டரி இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்... உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ், நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார்... இதுதவிர டென்னிசி மாகாணத்தில் 4 பேர், ஆர்கன்சாஸ் மற்றும் மிசூரி மாகாணங்களில் தலா 2 பேர் இந்த கடுமையான சூறாவளிக்கு பலியாகினர்... அமெரிக்க மாகாணங்களை தாக்கிய இந்த சூறாவளிக்கு இதுவரை 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சொல்கிறார்கள்.. இதைதவிர, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்..

உயிர்பலி
அந்தந்த மாகாணங்களில் உள்ள ஃபேக்டரிகள் இடிந்து விழுந்ததால், அந்த இடிபாடுகளிலும் பலர் சிக்கி உள்ளனர்.. அவர்களையும் மீட்கும்பணி தொடர்ந்து நடக்கிறது.. இதனால் உயிர் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அதிபர் ஜோ பிடன் உறுதி தந்துள்ளார்.. சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்ட கென்டக்கி மாகாணத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications