டிரம்ப் ரொம்ப வேகமாக இருக்கிறாரே.. இந்த ஒரு வீடியோவை பாருங்க புரியும்.. அடித்து நொறுக்கும் அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. அங்கே உள்ளே அகதிகளை, அத்துமீறி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் பொருட்டு அங்கே ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
டிரம்ப் பதவிக்கு வந்து சரியாக 5 நாட்களுக்குள் பெரிய அளவில் அங்கே ராணுவ படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும்.
மின்சார வேலிகள்:
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள்.
இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே கடந்த ஆட்சியிலேயே அவர் இந்த பகுதியில் எமர்ஜென்சி கொண்டு வந்தார். அதை நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்த நிலையில் அதை வீட்டோ அதிகாரம் மூலம் நீக்கி எமர்ஜென்சியை தெற்கு எல்லை பகுதியில் அமல்படுத்தினார்.
இந்த முறை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்.. இன்று பதவி ஏற்றவுடன் இந்த எமர்ஜென்சியை மீண்டும் கொண்டு வந்தார்.
படைகள் தயார்:
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற்றப்பட உள்ளனர். இதற்காக தெற்கு எல்லைக்கு 10 ஆயிரம் படை வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக பென்டகன் 1500 படை வீரர்களை எல்லைக்கு அனுப்பி உள்ளது. அத்துமீறி குடியேறியவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
JUST IN: 🇺🇸🇲🇽 President Trump deploys military to the US-Mexico border.
— BRICS News (@BRICSinfo) January 24, 2025
pic.twitter.com/dGQ4XcKFSM
நாடு முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு வந்து உள்ளார். அவரின் உத்தரவின் கீழ் இந்த ரெய்டு தொடங்கி உள்ளது.
டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications