மோடி நண்பர்தான்.. ஆனால் அதுக்கெல்லாம் பணம் தர முடியாது.. அடித்து சொன்ன டிரம்ப்.. மொத்தமா போச்சு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கிவந்த 180 கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தம் செய்யப்படுவதாக டிரம்பால் நியமிக்கப்பட்ட எலான் மஸ்க் தலைமையிலான DOGE குழு முடிவு செய்துள்ளது. இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்று உள்ளார். மோடி எங்கள் நண்பர்தான்.. ஆனால் அதற்கெல்லாம் இந்தியாவிற்கு பணம் தர முடியாது என்று டிரம்ப் கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாக அளித்த பேட்டியில், நாம் ஏன் இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. நம்மைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று; இந்தியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாம் அங்கு பிஸ்னஸ் செய்ய முடியாது. இந்தியா மற்றும் அவர்களின் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்.

USA Donald Trump Visa

வாக்காளர்களுக்கு 21 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவில் வாக்காளர்கள் எப்படி வாக்களித்தால் நமக்கு என்ன? அமெரிக்கர்களின் வரி பணத்தை இதற்காகவெல்லாம் செலவழிப்பதை விரும்ப முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது., என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப் நிதி நிறுத்தம்

உலகம் முழுக்க உள்ள பல நாடுகளுக்கு வழங்கப்படும் USAIDஐ நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா செலவிட்ட தொகையை நிறுத்தி உள்ளது. வழங்கிவந்த 180 கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தம் செய்யப்படுவதாக டிரம்பால் நியமிக்கப்பட்ட எலான் மஸ்க் தலைமையிலான DOGE குழு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் நிதி இந்தியாவில் உள்ள 3ம் பாலின மருத்துவமனைகளுக்கு செலவு செய்யப்படுவதாக DOGE தலைவர் எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கான நிதியை நிறுத்துவதாகவும் மஸ்க் அறிவித்து இருந்தார். சரியாக பிரதமர் மோடி மஸ்க்கை சந்தித்த 48 மணி நேரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அமெரிக்கா பொதுவாக உலக நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும். பல திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி வழங்கும். இதை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதி என்று அழைப்பார்கள்.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதியை முடக்கும் முடிவை எடுத்து உள்ளார். இதனால் உலக வளர்ச்சி எதற்கும் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெற்று வந்த நிதியும் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி பாதிக்கப்படும் என்பதால் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் அமெரிக்க நிதியில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொண்டு நிறுவன செயல்பாடுகள், சில அரசு செயல்பாடுகள் என்று எல்லாம் முடக்கப்பட்டு உள்ளன. USAID எனப்படும் இந்த நிதி காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

USAID இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல பணிகளை செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா $140 மில்லியனைப் பெற உள்ளது. கடந்த ஆண்டு இதே தொகையை பெற்றது. இதை எல்லாம் இந்தியா மொத்தமாக இழக்கும். அதாவது கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை இந்தியா இழக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+