வான்டடாக வந்து வாங்கி கட்டிக்கொண்ட டிரம்ப்! இதெல்லாம் தேவையா? நெட்டிசன்கள் பொளேர்
நியூயார்க்: டிரம்ப் பதவியேற்றபோது மீம் காயின் (meme-coin) கிரிப்டோ கரன்சி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் மதிப்பு தொடக்கத்தில் ஆஹா, ஓஹோ என்று இது பேசப்பட்டாலும், தற்போது கேட்பாரற்று கவிழ்ந்து கிடக்கிறது. இது குறித்து டிரம்ப்பை சோஷியல் மீடியாக்களில் கிரப்டோகரன்சி ஆர்வலர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
10 ரூபாய் கொடுத்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் அது நேரடி பண பரிவர்த்தனை. இதுவே ஆன்லைனில் ஏர்பாட் ஆர்டர் போடுகிறோம் எனில், டிஜிட்டல் முறையில் பணத்தை கொடுப்போம். அவர்களும் வீடு தேடி வந்து டெலிவரி செய்துவிடுவார்கள். இதெல்லாம் இல்லாமல் மூன்றாவதாக உள்ள பண பரிவர்த்தனைதான் கிரிப்டோ கரன்சி. ஆன்லைனில் பொருட்களை வாங்க இது பயன்படுத்தப்படுகிறது.

சாதாரண சோப்பு, சீப்பு, செல்போன் போன்றவற்றை வாங்குவதற்கு அல்லாமல், வெடி குண்டு, துப்பாக்கி, போதை பொருட்கள், கொலை செய்வதற்கான கூலி ஆகியவற்றிற்கு இந்த கிரிப்டோ கரன்சிகள்தான் பயன்படுத்தப்படுகிறது. வாய்ப்பு இருந்தால், இதனை இன்றைய ரூபாயாக மாற்றி பணமாக கூட பெற்றுக்கொள்ளலாம்.
மிகவும் பேமஸான கிரிப்டோ கரன்சிதான் பிட்காயின். இது இன்றைய விலையில் ரூ.91 லட்சத்திற்கும் அதிகமாகும். இப்படி முறையாக செயல்படும் கிரிப்டோ கரன்சிகளை கலாய்க்க புதிய கரன்சிகள் களமிறக்கப்பட்டன. அவை மீம் காயின் (meme-coin) என்று அழைக்கப்பட்டது. Dogecoin, Shiba Inu coin போன்றவை இப்படி உருவாக்கப்பட்டதுதான். இதை கொண்டும் பொருட்களை வாங்க முடியும். ஆனால், இதன் விலை ரொம்ப மலிவாக இருக்கும். 1 ரூபாய்க்கு 10 Dogecoin வாங்கலாம். சோஷியல் மீடியாவில் இதற்கான ரீச் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு இதன் மதிப்பு உயரும்.
சரி இப்போ டிரம்ப் கதைக்கு வருவோம். நம்மாளு டிரம்ப் பதவியேற்றவுடன் TRUMP என்கிற மீம் காயினை வெளியிட்டார். அவர் பதவியேற்கும்போது, பிட்காயினின் விலை வரலாறு காணத உச்சத்திற்கு சென்றிருந்தது. எனவே கிரிப்டோ கரன்சி மீது கண்ணாக இருக்கும் சில கண்ணப்பர்கள், TRUMP காயினை வாங்கி குவித்தார்கள். அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில் இந்த காயினுக்கு மசுவு எகிறியது. போனா வராது.. பொழுது போனா கிடைக்காது என்கிற கணக்காக TRUMP காயின்கள் விற்று தீர்க்கப்பட்டன.
ஆனால், 3 நாட்களுக்கு பிறகு இந்த காயினின் மதிப்பு ஒரேயடியாக படுத்துவிட்டது. 'ஏய் டாமி எந்திரி' என்கிற கணக்காக, காசு கொடுத்து TRUMP காயினை வாங்கியவர்கள், இதன் மதிப்பை உயர்த்த படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது டிரம்ப் இந்த காயினை வெளியிட்ட நாளில் இதன் மதிப்பு 75 அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் ரூ.6,482) இருந்தது. ஆனால் இன்று 39 டாலராக (ரூ.3,370) குறைந்திருக்கிறது.
நீங்கதானே அறிமுகப்படுத்தினீர்கள், இப்போது இதன் மதிப்பு குறைந்திருக்கிறது. உங்களை நம்பிதானே நாங்கள் எல்லாம் முதலீடு செய்தோம் என சோஷியல் மீடியாக்களில் பலரும் டிரம்பை டேக் செய்து கேள்வி எழுப்ப.. அவரோ ரொம்ப கூலாக.. "எனக்கு இதபத்தி ஒன்னுமே தெரியாது. அறிமுகப்படுத்தனும்னு தோணுச்சி.. செஞ்சிட்டேன். அவ்வளவுதான்" என சொல்லி கழன்றுக்கொண்டார்.
இதனால் அவரை சோஷியல் மீடீயாவில் வைத்து, கிரிப்டோ ஆர்வலர்கள் பொங்கல் வைத்து வருகிறார்கள். டிரம்ப்பின் பதில், பொறுப்பற்றதாக இருப்பதாக சில கிரிப்டோ ஆர்வலர்கள் டீசன்ட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இப்படி கிரிப்ரோ காயினை அறிமுகம் செய்பவர்கள், அதை வைத்து லாபம் பார்ப்பதும், அதை நம்பி முதலீடு செய்பவர்கள் ஏமாளி ஆவதும் தொடர் கதையாகியுள்ளது.
நீங்க சொல்லுங்க மக்களே.. கிரிப்டோ கரன்சியில் முதலீடு லாபமா? நஷ்டமா?
-
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications