மூன்றாம் உலகப்போர் இப்படித்தான் இருக்கும்.. டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு!
நியூயார்க்: அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடியான உத்தரவுகளை போட்டுக்கொண்டே வருகிறார். தற்போது, விண்வெளியில் பாதுகாப்பு அம்சத்தை நிறுவ வேண்டும் என்று பென்டகனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Space-Based Missile Shield எனப்படும் இந்த பாதுகாப்பு அம்சம், விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. தனது உத்தரவின் மூலம், விண்வெளி என்பது ஆய்வு மட்டும் செய்ய மட்டும்தான், இஷ்டத்துக்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போக கூடாது என்கிற விதியை, டிரம்ப் உடைத்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவுக்கு இப்போதுவரை பாதுகாப்பு கொடுத்து வருவது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலஸ்டிக் ஏவுகணைகள்தான். ஆனால் இதில் சிக்கல் இருக்கிறது. அமெரிக்கா மட்டுமே இது போன்ற ஏவுகணைகளை வைத்திருக்கவில்லை. ரஷ்யா, சீனா, வடகொரியா, இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் இதை வைத்திருக்கின்றன. இந்த லிஸ்டில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள். எனவே, அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும்.
விழிப்புடன் இருக்க வேண்டும் எனில், அதற்கு நிறைய பணத்தை வாரி இறைக்க வேண்டும். மட்டுமல்லாது, திடீரென நடத்தப்படும் தாக்குதல்களை எந்த அளவுக்கு சமாளிக்க முடியும் என்று தெரியாது.
இதையெல்லாம் கணக்கு போட்ட டிரம்ப், விண்வெளியில் வான் பாதுகாப்பு கவசத்தை வைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியான கவசத்தை தயாரிக்கவும் பென்டகனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். எதிரி நாடுகளிலிருந்து புறப்படும் ஏவுகணைகளை அங்கேயே வைத்து தீர்த்துக்கட்ட இந்த வான் பாதுகாப்பு அம்சங்கள் பயன்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெண்டகன் இதற்கான பணிகளில் தீவிரமாக இறங்க தொடங்கியுள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள் போல நிலை நிறுத்தப்படும் பாதுகாப்பு கவசம், எதிரிநாட்டின் நிலப்பரப்பை துல்லியமாக கண்காணித்து வரும். எங்கிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் புறப்படுகிறதோ, அடுத்த நொடி அந்த ஏவுகணையை விண்வெளியில் உள்ள கவசம் அழித்துவிடும். இதற்காக ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படலாம். அல்லது லேசர் கூட பயன்படுத்தப்படலாம். ஆனால், டிரம்ப் போட்ட உத்தரவில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன.
1.விண்வெளி ஆய்வுக்கு மட்டுமே
2.மற்ற நாடுகளும் அமெரிக்காவை பின்தொடரும்
முதல் விஷயத்தை எடுத்துக்கொண்டால், விண்வெளியை நாம் பெரும்பாலும் ஆய்வுக்காகத்தான் பயன்படுத்தி வருகிறோம். உளவு செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டுதான் வருகிறது. ஆனால் அதனால் நேரடி அச்சுறுத்தல் எதுவும் கிடையாது. உளவு செயற்கைக்கோள்கள் ஆயுதம் கிடையாது. அது தகவல்களை மட்டுமே வழங்குகிறது.
இப்படி இருக்கையில் விண்வெளியில் ஆயுதங்களை குவிக்கும் டிரம்ப்பின் முயற்சி, மனித குலத்திற்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆயுதங்களால் விண்வெளியில் ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்தனை ஆண்டுகளாக மனித சமூகம் கண்டுபிடித்த அனைத்து கண்டுபிடிப்புகளும் ஒரே நொடியில் அழிந்துவிடும்.
இரண்டாவது விஷயம், அமெரிக்காவை பார்த்து ரஷ்யா, சீனா, ஈராக் உள்ளிட்ட நாடுகளும் விண்வெளி ஆயுதங்களை தயாரிக்க தொடங்கினால் நிலைமை என்னவாகும்? உலகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. போர்களை பொறுத்தவரை தொடங்குவது மிக எளிது. ஆனால் அதை நிறுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அப்படிய ஒரு போர் சூழலை இந்த விண்வெளி ஆயுதங்கள் உருவாக்காது என்பதில் என்ன நிச்சயம் இருக்கும்? ஆக எப்படி பார்த்தாலும் இது ஆபத்தானதுதான்.












Click it and Unblock the Notifications