அவன் கெடக்கான் அமெரிக்கா.. நீங்க எங்க ஊருக்கு வாங்க! இந்திய டெக்கிகளுக்கு சீனா வலை! சீன் மாறுதே!
நியூயார்க்: அமெரிக்காவில் வெளிநாட்டு ஐடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா விதிமுறைகள் திடீரென கடுமையடைந்துள்ள நிலையில், இதற்கான கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத உயர்வு, அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பொறியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க தொழிலதிபர்கள், ஐடி ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சீனா இந்திய ஊழியர்களை ஈர்ப்பது போல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
எச்1பி விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை பார்க்கும் வெளிநாட்டு நிபுணர்களுக்கு வழங்கப்படும் முக்கிய அனுமதி நடைமுறையாகும். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய பொறியாளர்கள் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர்.
ஆனால் தற்போது டொனால்ட் டிரம்பின் திடீர் உத்தரவு காரணமாக தாங்க முடியாத கட்டண உயர்வு, பல்வேறு நிபந்தனைகள் ஆகியவை காரணமாக, இந்தியர்கள் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது.

எச்1பி விசா
இந்நிலையில் டொனால்ட் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க தொழில்நுட்ப வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி எஸ்தர் கிராபோர்டு, "ட்விட்டர் நிறுவனம் நிர்வாக சவால்கள் சந்தித்த காலத்தில், இந்திய பொறியாளர்களே முழு நேரமும் உழைத்து அதை காப்பாற்றினர். சீன பொறியாளர்களும் சேர்ந்து தளத்தை இயங்கச் செய்தனர். அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சி வெளிநாட்டு திறமையாளர்களால்தான் சாத்தியமாகிறது. அவர்களை கட்டண, விதிமுறைகள் மூலம் தடுக்குவது நாட்டுக்கு தீங்கானது" என எச்சரித்துள்ளார்.
சிலிகான் பள்ளத்தாக்கு இந்தியர்கள்
அதேபோல், சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்படும் அமெரிக்க நிபுணர்கள், தொழிலதிபர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களின் தலைவர்களில் பலர் இந்திய வம்சாவளியினர். சிலிகான் பள்ளத்தாக்கு தொழில்நுட்ப ஊழியர்களில் சுமார் 25% பேர் இந்தியர்கள் என்பது, நாசா, ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்
நிலைமை இப்படியிருக்க, எச்1பி விசா கட்டண உயர்வு இந்திய பொறியாளர்களை குறைக்கும், அதனால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் எலான் மஸ்க் தற்போது எதுவும் பேசவில்லை என்றாலும், அவரது முந்தைய கருத்து ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "நான் அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் போன்ற முன்னணி நிறுவனங்களை நிறுவினேன். ஆனால், நான் அமெரிக்காவில் நுழைந்தது எச்1பி விசா மூலமே. இந்த விசாவின் முக்கியத்துவத்தை யாராவது எதிர்க்க வந்தால், அவர்களை எதிர்க்க நான் தயார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சீனா கே விசா
அமெரிக்காவின் கடுமையான விதிகள் இந்திய பொறியாளர்களுக்கு சிக்கல் தரும் நிலையில், சீனா புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. வரும் அக்டோபர் 1 முதல் 'கே-விசா' என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது," கே-விசாவுக்கு சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை. அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும்; நீண்டகாலம் சீனாவில் பணியாற்றலாம்.
சீனா
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் முன்னுரிமை பெறுவர். கல்வி, ஆராய்ச்சி துறைகளிலும் இளம் வல்லுநர்களுக்கு கே-விசா கிடைக்கும். சீன அதிபர் ஜி ஜின்பிங், 2035க்குள் உலகின் தொழில்நுட்ப தலைமையகமாக சீனாவை மாற்றும் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காகவே இந்த புதிய விசா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் கே-விசா
அமெரிக்காவின் எச்1பி விசா கட்டண உயர்வு, இந்திய ஐடி துறைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில், சீனாவின் கே-விசா அறிமுகம் இந்திய பொறியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து வைக்கிறது. இதனால், எதிர்காலத்தில் இந்திய திறமையாளர்கள் அமெரிக்காவை விட சீனாவை நோக்கி நகரும் சூழல் உருவாகலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications