Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியைக் கையாளும் கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். மேலும், அத்தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி டிரம்ப் தாக்கினால் ஈரான் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என்பதால் வளைகுடாவில் அச்சம் நிலவுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. இதனால் ஈரான் அந்த இரண்டு நாடுகளின் ராணுவத்திற்கு எதிராகவும் தீவிரமான தாக்குதலை தொடங்கி உள்ளது. வளைகுடா முழுவதிலும் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதில் வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

Iran us Donald trump

அமெரிக்காவில் உயர்ந்த பெட்ரோல் விலை

அமெரிக்காவிலும் ஆயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரான் போரால் எண்ணெய் விலை அதிகரிப்பு அமெரிக்காவிற்கு லாபம் என்றாலும், போரால் பெருமளவு பணத்தை செலவு செய்து வருகிறது அமெரிக்கா. அதேபோல் எண்ணெய் விலைஉயர்வால் அமெரிக்காவும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்களையும் தாக்கி வருகிறது.


கார்க் தீவில் தாக்குதல்

இதனால் கோபத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார். அந்த வகையில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியைக் கையாளும் கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தி அத்தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவ இலக்குகள்

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், "மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் நடத்தியுள்ளது. ஈரானின் மகுடமாகத் திகழும் கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் அது முற்றிலும் அழித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி

அத்தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிக்காமல் இருக்க இப்போதைக்கு முடிவு செய்துள்ளேன். இருப்பினும், ஈரானோ அல்லது வேறு யாராவதோ ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால், எனது முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்," என எச்சரித்துள்ளார்.

பின்னணி மற்றும் பாதிப்புகள்

மத்திய கிழக்கில் போர் நீடித்து வரும் நிலையில், கார்க் தீவைக் கைப்பற்றும் திட்டம் ஆலோசனையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் நிலப்பகுதியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவு, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தைக் கையாள்கிறது என்று ஜே.பி. மோர்கன் நிறுவனத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.

ஈரானை பாதிக்கும்

இந்தத் தீவின் மீது எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் உடனடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி உடனடியாகத் தடைபடும். இது ஹார்முஸ் ஜலசந்தியிலோ அல்லது பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிராகவோ கடுமையான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டும்," என்று ஜே.பி. மோர்கன் அமைப்ப தெரிவித்துள்ளது.

எண்ணெய் போக்குவரத்து பாதிப்பு

ஈரானின் தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் போக்குவரத்து கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இந்த வழியாகவே செல்கிறது. இந்தத் தடையால் பிற வளைகுடா நாடுகளின் எண்ணெய் உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் ட்ரம்ப், எண்ணெய் ஏற்றுமதியைச் சீராக்க அமெரிக்க கடற்படை விரைவில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் டேங்கர் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

வரலாறு என்ன

1960 மற்றும் 1970-களில் ஈரானின் எண்ணெய் விரிவாக்கத்தின் போது கார்க் தீவு முக்கிய வளர்ச்சியைக் கண்டது. ஈரானின் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகள் ஆழம் குறைந்தவை என்பதால், மிகப் பெரிய டேங்கர் கப்பல்களைக் கையாள கார்க் தீவு மிக முக்கியமான இடமாக மாறியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+