அடிமடியிலேயே கை வைத்த டொனால்ட் ட்ரம்ப்.. அலறுதே அட்லாண்டிக்! சரக்குக்கு வரி.. அதுவும் 200 சதவீதமாமே!
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் பல்வேறு நாடுகள் மீது வர்த்தகப் போரை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை ஐரோப்பிய யூனியன் அதிகரித்துள்ள நிலையில் கடுமையான பதிலடி தரப்படும் என ட்ரம்ப் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் வரிவிதிக்க பரிந்துரைத்துள்ள நிலையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயினுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்று இருக்கிறார். அன்றிலிருந்து அவரது நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்களை விலங்குகள் போல நடத்தியது உலக அளவில் எதிர்ப்பினை சம்பாதித்து கொடுத்தது.
மேலும் பல நாடுகள் மீது வர்த்தகப் போரை டொனால்ட் டிரம்ப் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நம்பிக்கை வாய்ந்த கூட்டாளி, நட்பு நாடு என பார்க்கப்படும் இந்தியா மீது அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மெக்சிகோ, கனடா, சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு விதிக்கும் அதே அளவு வரியை நாங்களும் விதிப்போம் என கூறி இருக்கிறார். இதற்கு சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
அதே நேரத்தில் இந்தியா இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை முதல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கொடுத்திருந்த வரிவிலக்குகள் சலுகைகள் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25% வரியை விதித்துள்ளது. இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது 26 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் முடிவை ஐரோப்பிய யூனியன் கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பாவின் இந்த அறிவிப்புக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்வினையாற்றியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," அமெரிக்க பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்தால் அதற்கு பதிலடியாக அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதும் அதே அளவு வரி விதிக்கப்படும். அது மட்டுமில்லாமல் இந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவில் எந்தெந்த பொருள்களுக்கு என்னென்ன விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களை அந்த நாடுகளின் பொருள்களுக்கும் வரிவிதிப்பதற்கான திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வருவதில் எந்த மாற்றமும் இல்லை" என கூறி இருக்கிறார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பார்வை மதுபானங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது என ஏற்கனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கிக்கு வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து மதுபானங்களுக்கு வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெய்ன் உள்ளிட்ட மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும் எனவும், இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெய்ன் தொழிலுக்கு சிறப்பானதாக அமையும் என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். மேலும் 200 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல்












Click it and Unblock the Notifications