தோல்வி அடைந்தது பதவி நீக்க தீர்மானம்.. டிரம்பிற்கு மாபெரும் வெற்றி.. அமெரிக்காவில் டிவிஸ்ட்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோல்வி அடைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    World news update 06-02-2020 | அக்கரை சீமை 06-02-2020

    நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அவரின் பதவிக்கு ஆபத்து இல்லை.இதனால் அடுத்த வருடம் இறுதியில் நடக்கும் தேர்தல் வரை டிரம்ப் அதிபராக இருப்பார்.

    அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் ஒன்றும் இல்லாமல் போய் உள்ளது . அவருக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்று, அவர் பதவி விலகுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

    என்ன புகார்

    என்ன புகார்

    அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் அரசு மூலம் சதி செய்தது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது. காங்கிரஸ் அவையை மதிக்காதது என்று டிரம்ப் மீது நிறைய புகார் வைக்கப்பட்டது. அதன்பின்தான் இது தொடர்பான தீர்மானம் அந்நாட்டின் இரண்டு அவையிலும் தாக்கல் ஆனது . அந்நாட்டு நாடாளுமன்ற பிரநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது.

    எத்தனைஇ இடங்கள்

    எத்தனைஇ இடங்கள்

    ஜனநாயக கட்சிக்கு அங்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களே இருக்கிறார்கள். இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர். இதனால் அங்கு பதவி நீக்க தீர்மானம் வென்றது. அமெரிக்காவில் பொதுவாக பதவி நீக்க தீர்மானம் இரண்டு அவையிலும் விசாரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த புகார்கள் மீது செனட் சபையில் விசாரிக்கப்பட்டது.

    முடிவு செய்யும்

    முடிவு செய்யும்

    செனட் சபைதான் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து விலக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்ய முடியும். அதாவது மொத்தமாக அவரை பதவி நீக்கம் செய்யும். அதன்படி இன்று அங்கு வாக்கெடுப்பு நடந்தது. இதில்தான் டிரம்ப் வென்றுள்ளார். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள்.

    வென்றார்

    வென்றார்

    அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். செனட் சபையில் டிரம்பிற்கு ஆதரவாக அதிகார துஷ்பிரயோக வழக்கில் 52 பேரும், எதிராக 48 பேரும் வாக்களித்தனர். காங்கிரஸ் அவையை மதிக்காதது தொடர்பான வழக்கில் டிரம்பிற்கு ஆதரவாக 53 பேரும், எதிராக 47 பேரும் வாக்களித்தனர்.

    தப்பித்து சென்றார்

    தப்பித்து சென்றார்

    இதனால் செனட் சபையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதேபோல் டிரம்ப் குற்றமற்றவர் என்றும் நிரூபிக்கப்ட்டுள்ளார். இதனால் அவரின் பதவிக்கு ஆபத்து இல்லை.இதனால் அடுத்த வருடம் இறுதியில் நடக்கும் தேர்தல் வரை டிரம்ப் அதிபராக இருப்பார். அவர் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது. ஆனால் டிரம்பிற்கு அவரின் அரசியல் வாழ்க்கையில் இது பெரிய கருப்பு புள்ளியாக இருக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+