சீச்சீ.. டிவி செய்தியில் திடீரென ஓடிய ஆபாச பட காட்சிகள்.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட நியூஸ் சேனல்
டிவியில் வானிலை செய்தி வாசித்து கொண்டிருந்தபோது திடீரென ஆபாச வீடியோ ஓடியது
நியூயார்க்: டிவியில் வானிலை அறிக்கையை நியூஸ் ரீடர் வாசித்து கொண்டே இருந்தபோது, திடீரென ஆபாச காட்சி ஒளிபரப்பாகிவிட்டது.. இதைபார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
வழக்கமாக டிவியில் செய்திகள் வாசிக்கும்போது நிறைய சம்பவங்கள் நடக்கக்கூடும்.. பெரும்பாலும் செய்திகள் லைவ் ஆக ஒளிபரப்பாக கூடியது என்பதால், அங்கே நடக்கும் காட்சிகளும் அப்படி அப்படியே பதிவாகிவிடும்.
செய்திகள் வாசிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.. பல இடங்களில் செய்தி வாசிக்கும்போது நிலநடுக்கம் ஏற்பட்டு, செய்தி வாசிப்பாளர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்..

சம்பவம்
கேரளாவில் 2 வருடத்துக்கு முன்பு பெண் ஒருவர் செய்தி வாசிக்கும்போது, அம்மாநில அரசு விருது அறிவிக்கும் பட்டியலில் தன் பெயரை தானே வாசித்தார்.. இப்படி இன்ப அதிர்ச்சிகளும், மரண சம்பவங்களும், அதிர்ச்சி சம்பவங்களும் ஏராளமாக நடந்துள்ளன.. அது தொடர்பான வீடியோக்கள் இன்னமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டுதான் இருக்கிறது.

அதிர்ச்சி
இப்படிப்பட்ட சூழலில், வாஷிங்டனில் இதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கடந்த 17-ம் தேதி வாஷிங்டன்ஸ்டேட் என்ற செய்தி நிறுவனம் மாலை 6.30 மணிக்கு செய்தி ஒளிபரப்பானது.. நியூஸ் ரீடர் வானிலை அறிக்கையை வாசித்து கொண்டிருந்தார்.. அப்போது பின்னாடி உள்ள ஸ்கிரீனில் வானிலை தொடர்பான கிராஃபிக் வீடியோவுக்கு பதிலாக தவறுதலாக ஆபாச பட காட்சிகள் வந்துவிட்டது...

வைரல்
செய்தி வாசிப்பாளருக்கு பின்னால் ஸ்கிரீன் இருந்ததால், அவர் அதை கவனிக்கவில்லை. ஆனால், கிட்டதட்ட13 செகண்டுகள் அந்த காட்சி ஓடி கொண்டே இருந்தது.. இதை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு ஒருவழியாக சுதாரித்து கொண்ட செய்தி நிறுவனம், உடனே அந்த லைவ் ஒளிபரப்பை நிறுத்திவிட்டது.. அதற்கு பிறகு இரவு 11 மணிக்கு செய்தி மறுபடியும் ஒளிபரப்பானது..

வீடியோ
அப்போது, சாயங்காலம் நடந்த தவறான ஒளிபரப்புக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. செய்தி நிறுவனத்தில் எப்படி இந்த வீடியோ ஒளிபரப்பானது? யார் செய்த தவறு என்ற விசாரணை நடந்து வருகிறது. இந்த வித்தியாசமான "வானிலை வீடியோ"தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால், அவைகளில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள்தான் பதிவாகி உள்ளன.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications