ஹமாஸ் ஆதரவாளர்கள் ட்விட்டர் அக்கவுண்டுகளை அதிரடியாக நீக்கிய எக்ஸ்..முக்கிய அறிவிப்பு
நியூயார்க்: இஸ்ரேல் மீது சமீபத்தில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, சமூக ஊடகத் தளமான எக்ஸ் ( ட்விட்டர்) நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆதரவாளர்கள் கணக்குகளை அதிரடியாக நீக்கி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருபோதும் இடமில்லை என்று அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியது.போரினை ஹமாஸ் இயக்கம் தான் தொடங்கிவைத்தது. கடந்த சனிக்கிழமை அன்று சரமாரியாக இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியது. சுமார் 6ஆயிரத்திற்கும் அதிகமாக ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை எல்லையில் உள்ள வீரர்ரகளை கொன்று உள்ளே புகுந்து இஸ்ரேல் எல்லையை ஒட்டி இருந்த கிராமங்களில் வீடு வீடாக புகுந்து கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளியதுடன், பெண்கள் உள்பட சுமார் 250 பேரை பிணைய கைதியாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்து சென்றனர். இப்போது கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் சுட்டுத்தள்ளிய வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போர் தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், காஸாவில் 1,100 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய பயங்கர தாக்குதல்களுக்குப் பிறகு, சமூக ஊடகத் தளமான எக்ஸ் ( ட்விட்டர்) நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆதரவாளர்கள் கணக்குகளை அதிரடியாக நீக்கி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருபோதும் இடமில்லை என்று அறிவித்துள்ளது.
எக்ஸ் சமூக ஊடகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டோ யாக்காரினோ கூறுகையில், "எக்ஸ் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உரையாடலுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது. குறிப்பாக இது போன்ற முக்கியமான தருணங்களில், மேலும் எக்ஸ் தளத்தின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு சட்டவிரோதமான கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை அழிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பயங்கரவாத அமைப்புகள் அல்லது வன்முறை தீவிரவாத குழுக்களுக்கு எக்ஸ் (டுவிட்டர்) இல் ஒருபோதும் இடமில்லை, இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது ஆக்டிவ்வாக உள்ள ஹமாஸ் குழுக்களின் ட்விட் கணக்குகள் உட்பட, அனைத்து ஹமாஸ் ஆதரவாளர்கள் கணக்குகளையும் அகற்றுவோம்" என்று அதிரடியாக கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications