Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையை காட்டிய எலான் மஸ்க்.. ட்விட்டரை "எக்ஸ்" என்று மாற்றிய உடனே.. இப்படியா.. எல்லாமே மாறுதுங்க!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தை எக்ஸ் என்ற பெயர் மாற்றிய நிலையில் அதில் புதிய பயன்பாடு ஒன்றை சேர்க்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்கு பின் பெரிய பிளான் இருப்பதாக கூறப்படுகிறது.

எக்ஸ் செயலியில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தனியார் நிறுவனமாக பங்குசந்தையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தை மொத்தமாக எல்லா பங்கிற்கு காசு கொடுத்து வாங்கினார் மஸ்க்.

Twitter X has received a license for payment services in the 🇺🇲 US state of Georgia

தற்போது X.COM என்ற தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை கிளிக் செய்தால் அது தானாக ட்விட்டர் பக்கத்திற்கு எடுத்து செல்லும். இன்று ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை நீக்கப்படும். அதற்கு பதிலாக எக்ஸ் கொண்டு வரப்படும். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ட்விட்டர் தளம் மாற்றப்பட்டு எக்ஸ் தளமாக மாறும். இதில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

எக்ஸ் நிறுவனம் எப்படி?: எக்ஸ் வருங்கால சிஇஓ யாக்கரினா இது தொடர்பாக செய்த ஸ்டில், எக்ஸ் நிறுவனம்தான் இனி எதிர்காலம். வீடியோ, ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங் எல்லாம் சேர்ந்து ஒரே இடத்தில இருக்கும் விதமாக ஒரு பிராண்டாக இது இருக்கும். எல்லா சேவைகளை அளிக்கும் இடமாக இது இருக்கும். ஏஐ மூலம் இது செயல்படும். எக்ஸ் நம்மை எல்லாம் இணைக்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.

எக்ஸ்: ட்விட்டர் நிறுவனத்தை எக்ஸ் என்ற பெயர் மாற்றிய நிலையில் அதில் புதிய பயன்பாடு ஒன்றை சேர்க்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். அதன்படி ட்விட்டர் நிறுவனம் பேமெண்ட் வசதியை உருவாக்குவதற்காக அனுமதி கோரியுள்ளது. முதல்கட்டமாக ஜார்ஜியா மாகாணத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக அங்கு அனுமதி கோரப்பட்டு உள்ளது.

இதற்காகவே அவரின் பழைய நிறுவனமான பேபால் நிறுவனத்திடம் இருந்து X.COM என்ற தளத்தை வாங்கி உள்ளார். இதை 1999ல் பே பாலுக்கு முன் மஸ்க் உருவாக்கினார். அதன்பின் இது செயல்படாமல் இருந்தது. தற்போது அந்த நிறுவனத்திடம் இருந்து மஸ்க் மீண்டும் வாங்கி உள்ளார். ட்விட்டரில் பொருளாதார சேவைகளை கொண்டு வர அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பின் பெரிய பிளான் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி எக்ஸ் நிறுவனத்தை அனைத்து பயன்பாட்டிற்குமான ஒரே ஒரு செயலியாக மாற்ற அவர் முடிவு செய்துள்ளாராம். அதாவது சீனாவில் வீ சாட் உள்ளது. இதில் சாட் செய்ய முடியும், போஸ்ட் செய்ய முடியும், உணவுகளை ஆர்டர் செய்ய முடியும்.

அதேபோல் பணம் அனுப்ப முடியும். இதற்கு சீனாவில் 1 பில்லியன் யூசர் உள்ளனர். இது அங்கே அனைத்து பயன்பாட்டிற்குமான ஒரே செயலியாக உள்ளது. இந்த நிலையில் அதேபோன்ற செயலியாக ட்விட்டரை மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதில் பொருளாதார ரீதியான சேவைகளை, அதாவது பணம் அனுப்புதல், பெறுதல், ஆர்டர் செய்தல் போன்ற சேவைகளை கொண்டு வர முடிவு செய்துள்ளார் மஸ்க்.

பின்னணி: ட்விட்டர் நிறுவனம் இதனால் மொத்தமாக உலகில் மக்கள் போன் பயன்படுத்தும் முறையையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்கினார். முக்கியமாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலை பணியில் இருந்து நீக்கினார். அதை தொடர்ந்து பல இந்தியர்கள் உட்பட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் ட்விட்டர் நிறுவன பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பும் நீக்கப்பட்டது.

இந்த விவகாரங்களுக்கு இடையில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. அதன்பின் போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

கட்டுப்பாடு: அதன்படி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்தார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் உடனடியாக இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். தற்போது X.COM என்ற தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+