நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவில் தவிக்கும் இந்தியா.. உதவும் அமெரிக்கா.. டிரம்ப் சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா நோய் தொற்றால பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள் தந்து அமெரிக்கா உதவும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Recommended Video

    We stand with India and Modi : Donald Trump

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அமெரிக்காதான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 14லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 85 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். எனினும் உலக வல்லரசான அமெரிக்கா கொரோனாவால் தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளுக்கு உதவி வருகிறது.

     United States will donate ventilators to our friends in India: Trump

    அந்த வகையில் அமெரிக்காவிற்கு ஆபத்தான சமயத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொடுத்து உதவிய இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள் தந்து உதவ அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

     United States will donate ventilators to our friends in India: Trump

    இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்காக (இந்தியர்களுக்கு) அமெரிக்கா வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த தொற்றுநோய்களின் போது நாங்கள் இந்தியா மற்றும் நரேந்திர மோடியுடன் நிற்கிறோம். தடுப்பூசி வளர்ச்சிக்கும் நாங்கள் ( இருநாடுகளும்) ஒத்துழைக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நாங்கள் (அமெரிக்கா இந்தியா) ஒன்றாக வெல்வோம்" என்று கூறியுள்ளார்.

     United States will donate ventilators to our friends in India: Trump

    தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 359 பேர்.. கடலூரில் ஆச்சர்யம் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 359 பேர்.. கடலூரில் ஆச்சர்யம்

    கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் சுமார் 3500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 2700 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் மருததுவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் மூச்சுத்திணறாலால்தான் அதிகம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். எனவே கொரோனாவை வெல்ல வெண்டிலேட்டர்கள் அதிக அளவு தேவையாகும். இந்த சூழலில் இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள் வழங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    English summary
    United States will donate ventilators to our friends in India. We stand with India and Narendra Modi during this pandemic: says US President Donald Trump
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X