சீனா, தைவானை வைத்து கேம் விளையாடும் அமெரிக்கா.. இந்தியா டிரம்ப் கார்டை போட நேரம் வந்தாச்சு!
நியூயார்க்: தைவானை ஆதரிக்கும் வகையில், அமெரிக்க முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதனால் சீனா கோபப்பட்டிருக்கிறது. இந்த மோதல்கள் இந்தியாவுக்கான வாய்ப்பை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவை கடுமையாக கண்டித்துள்ள சீனா, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று அமெரிக்கா ஏற்கெனவே ஏற்றுக்கொண்டது. இருப்பினும் தைவானில் உள்ள சில பிரிவினைவாதிகள், தனி நாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். சுதந்திரமான தனி நாடு தைவானுக்கு ஆதரவு கிடையாது என்பதுதான் அமெரிக்காவின் நிலைபாடாக இருந்தது. ஆனால் நேற்று இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக்கொண்டது.
அதாவது இந்தியா, பாகிஸ்தான் என ஒவ்வொரு நாடு குறித்தும் தங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை அறிக்கையாக இணையதளத்தில் வெளியிட்டு இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மெயின்டனஸுக்காக இணையதளம் புதுப்பிக்கப்படும்போது, இந்த அறிக்கைகளும் புதுப்பிக்கப்படும்.
சீனா குறித்த நிலைப்பாட்டு அறிக்கையில், "தைவானின் சுதந்திர போராட்டத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்" என்கிற வரியை அமெரிக்கா நீக்கியிருக்கிறது. கேட்டால் வெப்சைட் புதுப்பிக்கும்போது மாறிவிட்டாக சொல்லியிருக்கிறது. ஆனால், மீண்டும் அந்த வரியை சேர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது டிராகன் சீனாவை உசுப்பேற்றிருக்கிறது. தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி. இன்னைக்கு அடிச்சிப்போம், நாளைக்கு சேந்துப்போம். நீ ஏன் உள்ள வர? என்கிற டோனில் சீனா கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆக சீனாவும் அமெரிக்காவும் இப்போது சண்டை செய்யும் மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகும். போர் வந்துவிட்டால் சீனாவில் எந்த முதலீடும் வராது. அனைத்தும் இந்தியா பக்கம்தான் திரும்பும்.
குறிப்பாக சீனாவின் உற்பத்தி பாதிக்கப்படும். செமி கண்டக்டர், எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும். ஜப்பான், ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவில் இருந்துதான் இதனை உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், போர் தொடங்கினால் இந்த உற்பத்தி சடசடவென குறைந்துவிடும். எனவே இந்த நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வரும். இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பு.
ஆனால் அதற்கேற்ப இந்தியாவின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். அப்படி மட்டும் செய்தால் இந்தியாதான் அடுத்த சீனா. பொருளாதாரம் கிடுகிடுவென உயர்ந்துவிடும். இந்தியாவிடம் இருக்கும் டிரம்ப் கார்டு இதுதான்.
அதேபோல பாதுகாப்பு விஷயத்திலும் இந்தியாவுக்கு பிரச்சனைகள் கொஞ்சம் குறையும். உதாரணமாக லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் தலையீடுகள் பலவீனமடையும். நாமும் இழந்ததை மீட்டுவிடலாம். போதாத குறைக்கு அமெரிக்கா நம்ப பக்கம் இருக்கும் என்பதால், சீனாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும்.
பூகோள அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். இலங்கை, மாலத்தீவு மற்றும் வங்கதேசம் உள்ளிட்டவை மீண்டும் இந்தியா பக்கம் சாய தொடங்கும். இந்தியாவிடம் உதவிகளை கேட்கும். இதன் மூலம் இந்த நாடுகளை மீண்டும் நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications