Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பூஸ்டர் டோஸ்".. கதிகலங்க செய்யும் "டெல்டா வேரியண்ட்".. 3வது டோஸூக்கு ரெடியாகும் அமெரிக்கா

பூஸ்டர் டோஸ்களை செலுத்த போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தொற்று பரவி உள்ள நிலையில், ஒவ்வொரு அலை பரவலாக மெல்ல வந்து கொண்டிருக்கிறது.. கொரோனாவைரஸ் முதல் அலையைவிட, இந்த இரண்டாவது அலையின் தீவிரம் வீர்யமானதாக இருந்தது..

அதனால்தான் லட்சக்கணக்கானோரையும் அது காவு வாங்கியது. இதனை தொடர்ந்து பல நாடுகளில் 3-வது அலை பரவி வருகிறது.. இந்த நேரத்தில் 4 வது அலையும் வந்து விடும் என்றும் விஞ்ஞானிகள் அலர்ட் செய்து, பீதியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

 வைரஸ்

வைரஸ்

இந்த கொரோனா வைரஸ் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது... டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ், ஆல்பா என இதன் உருமாற்றம் அதிகரிக்கிறது.. இதில் டெல்டா வைரஸ்தான், 2வது அலை பரவலுக்கு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. இதற்கான மருந்தை உலக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்.. இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே நமக்கு உள்ள ஒரே ஆறுதலாக உள்ளது..

 2 டோஸ்கள்

2 டோஸ்கள்

அதனால், உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. பொதுமக்களும் நிலைமையை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வந்து கொண்டிருக்கிறார்கள். சில நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசியை முழுதாக போட்டு முடித்து விட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ் தடுப்பூசி முழுமையாக போட்டு முடித்துவிட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ்களையுமே முடித்துவிட்டு, 3வது தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர்.

வறுமை

வறுமை

ஆனால், வறுமையில் உள்ள ஒரு சில நாடுகளால், தங்கள் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடவே தடுமாற்றமாக இருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் பூஸ்டர் டோஸ் என்ற விவகாரம் கிளம்பி உள்ளது.. அதாவது 2 டோஸ் போட்டுக் கொண்டு, 3வது டோஸ் போட்டுக் கொள்வதற்குதான் பூஸ்டர் டோஸ் என்று பெயர்.. அதற்கேற்றபடி, இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடப்படவில்லை என்பதால், இந்த 3வது டோஸ் செலுத்துவதில் ஹூ அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

 நிராகரிப்பு

நிராகரிப்பு

பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தினால் ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடுவதற்கு அது உதவும் என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.. ஆனால், ஹூவின் இந்த கோரிக்கையை ஜெர்மனியும், பிரான்ஸும் ஏற்கனவே நிராகரித்துவிட்டன.. செப்டம்பர் மாதம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நோயாளிகள், முதியவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்த விரும்புகிறோம் என்று ஜெர்மனியும் அறிவித்தும் விட்டன.

அமெரிக்கா

அமெரிக்கா

இப்படிப்பட்ட சூழலில்தான், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர்... இப்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று அதிகமாக உள்ளது.. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் அந்த நாடு இடம்பெற்று வரும் நிலையில், இந்த 3வது டோஸ் குறித்த பேச்சு ஆரம்பமாகி உள்ளது.. இப்படி 3வது டோஸ் செலுத்துவது வேகமாக பரவி வரும் டெல்டா வேரியண்ட்டிடம் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள உதவும் என்றும் அந்த நாட்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை


அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இருந்து வந்த அறிவிப்பின்படி, பலருக்கு டெல்டா வேரியண்ட் எளிதில் தாக்கக்கூடும் என்கிறார்கள்.. இதைதவிர, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய், உட்பட பிற இணை நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதும் இதற்கு காரணமாக உள்ளது. அதனால்தான், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இதே போன்ற பரிந்துரைகளை கொண்டுள்ளன.

 தடுப்பூசி

தடுப்பூசி

கொரோனா நோய் பரவலுக்கு எதிராக 3வது டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என அமெரிக்க சுகாதார தரப்பு அறிவித்துள்ளது இதுதான் முதல்முறையாகும்.. அதாவது இந்த 3வது தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள அமெரிக்கர்களை கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட வைக்கலாம் என்பதே நோக்கமாக உள்ளது... அதுமட்டுமல்ல, இந்த முடிவு அதிக ஆபத்துள்ள குழுவிற்கும், சுமார் 3 சதவீத வயது முதிர்ந்த அமெரிக்கர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நோய் எதிர்ப்பு மண்டலம் மிக சிறப்பாக செயல்படும் மக்களுக்கு செலுத்தப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+