அமெரிக்காவை துரத்தும் கொரோனா! அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கும் தொற்று பாதிப்பு உறுதி
நியூயார்க்: அமெரிக்க அதிபர் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து இவர் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 69 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 69 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இது தவிர பொருளாதார பாதிப்புகள், வேலையின்மை ஆகியவை சமூக பிரச்னைகளாகவும் வெடித்தது. பின்னர் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதன் தீவிரம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும் உருமாற்றம் அடைந்த வைரஸ் இந்த தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாமல் பரவ தொடங்கியுள்ளது. அமெரிக்காவை பொறுத்த அளவில் மோசமான நிர்வாக காரணத்தால் சுமார் 11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பெரும் வல்லரசு நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெற்கொள்ளாததால் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் விமர்சித்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது அந்நாட்டில் புதிய வகை வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு பிஏ.2.86 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ் எந்த அளவுக்கு வீரியமானது? இதை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கூறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், தொற்று பாதிப்பின் தீவிரம் லைட்டாகதான் இருப்பதாகவும், ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications