ஐடி ஊழியர்களுக்கு தான் பெரும் ஆப்பு.. விசாவால் வீதிக்கும் வரும் நிறுவனங்கள்! அதிரடி காட்டும் USCIS!
நியூயார்க்: அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ம்ப். இதனால் அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் ஐடி ஊழியர்கள், செவிலியர்கள், மத போதகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் தற்போது யார் யாருக்கு இந்த புதிய விசா கட்டணம் பொருந்தும் என்பது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பான யூஎஸ்சிஐஎஸ் வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.
அமெரிக்காவில் ஐடி, செவிலியர், மத போதகர்கள் உள்ளிட்ட வேலைகளில் வெளிநாட்டினர் பணியாற்றும் போது பெற எச்1பி (H1B) விசா வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த கட்டணத்தில் தான் மிகப் பெரிய மாற்றம் அறிவித்தார் அமெரிக்க அதிபரான டொனால் ட்ரம்ப்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி, இனி எச்1பி விசா பெறும் விண்ணப்பதாரர்கள் 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ₹88 லட்சம் ஆகும்.

ஹெச்1பி விசா
இந்த புதிய விதிமுறைகள் 2025 செப்டம்பர் 21க்கு பிறகு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என USCIS அறிவித்துள்ளது. அதாவது, செப்டம்பர் 21 நள்ளிரவு 12:01 மணிக்கு முன்னர் எச்1பி விசா கோரி விண்ணப்பித்தவர்கள், அல்லது ஏற்கனவே விசா பெற்றவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், முன்னர் எச்1பி விசா மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களும் இந்தப் புதிய கட்டணத்தை கட்ட வேண்டும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விசா கட்டணம்
இந்நிலையில், தற்போது எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ பயணம் செய்வதை இந்த புதிய அறிவிப்பு எந்தவிதத்திலும் தடுக்காது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, விசா செல்லுபடியாக இருக்கும் வரை அவர்கள் தங்களது பணியிடத்தையும், பயணத்தையும் வழக்கம்போல மேற்கொள்ளலாம்.
வெளிநாட்டு தொழிலாளர்கள்
எச்1பி விசா என்பது, அமெரிக்காவில் தற்காலிகமாக சிறப்பு தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டினருக்கான விசா வகை ஆகும். இது பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற உயர் திறனுடைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் அமெரிக்க அரசு 65,000 எச்1பி விசாக்களை வழங்குகிறது. கூடுதலாக, அமெரிக்காவில் உயர் கல்வி பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
இதனால் ஆண்டுக்கு மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. எச்1பி விசா பெற்றவர்கள் ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகள் வரை காலம் நீட்டிக்கலாம். அமெரிக்க அரசின் சமீபத்திய தரவின்படி, தற்போது எச்1பி விசாவில் சுமார் 7.5 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரான மனைவி, பிள்ளைகள் உள்ளிட்டவர்களையும் சேர்த்து, மொத்தம் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் தங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அதாவது சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்சல்டன்சி விசா
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணத்தை 1,32,000 ரூபாயிலிருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இந்த புதிய கட்டண நடைமுறை உடனடியாக அமலில் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இது பெரிய சவாலாக அமைந்துள்ளது.
-
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்!












Click it and Unblock the Notifications