மனைவியே யாருன்னு தெரியல! அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஜோ பைடன் ராஜினாமா? பதறும் வெள்ளை மாளிகை
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ள அதிபர் ஜோ பைடன், அதிபர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
உலகம் முழுக்க நடக்கும் அதிபர் தேர்தல்கள், பிரதமர் தேர்தல்களில் அதிக சுவாரசியமான தேர்தல் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல்தான். இரண்டு கட்சிகளான குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி, இது போக அவ்வப்போது ஏதாவது மூன்றாவது கட்சி போட்டிக்கு வரும். இந்த பிரதான இரண்டு கட்சிகளில் உள்ள பல்வேறு தலைவர்கள் முதலில் தங்கள் கட்சிக்குள் போட்டி போடுவார்கள்.

உதாரணமாக குடியரசு கட்சியை வைத்துக்கொள்வோம். இதில் பலர் அதிபர் வேட்பாளர் ஆக முயன்றால்.. அவர்களுக்கு உள்ளே முதலில் பிரைமரி தேர்தல்கள் கட்சிக்கு உள்ளேயே நடக்கும். அந்த பிரைமரி தேர்தலில் நிற்கும் நபர்களுக்கு இடையே விவாதங்கள், யார் அதிக அளவு பணத்தை நிதி உதவியாக பெறுகிறார்கள், யாருக்கு மக்கள் மதிப்பு உள்ளது என்றெல்லாம் கணிக்கப்படும். அதை வைத்து ஒருவர் அந்த கட்சியில் இருந்து தேர்வு செய்யப்படுவார்.
அதேபோல் கஜனநாயக கட்சியிலும் ஒருவர் வேட்பாளர் ஆவார். இப்போது குடியரசு கட்சியில் டிரம்ப அதிபர் வேட்பாளர். ஜனநாயக கட்சியில் அதிபர் பைடன் வேட்பாளர் ஆனார்.
ராஜினாமா: ஆனால் அதன்பின் பைடன் பல விஷயங்களில் மிக மோசமாக சொதப்பினார்.
1. டிரம்ப் உடன் நடந்த விவாதத்தில் பைடன் மோசமாக சொதப்பினார். அவர் சொதப்பியதை பார்த்து அவரின் சொந்த ஜனநாயக கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலக சொல்லி உள்ளனர். ஜோ பைடன் செய்ய வேண்டியதெல்லாம், அவரது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை முறையாக நிகழ்த்துவதுதான். பெரிதாக வாதம் எல்லாம் செய்திருக்க வேண்டியது இல்லை.
2. அவர் தனது பேச்சு முழுக்க தடுமாறினார். திக்கி திணறினார். மேலும், தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான நேரத்தில், அவர் மேடையிலேயே பொம்மை போல நின்றது, பதறியது, பேச்சுக்கு இடையே இடையே அப்படியே அசையாமல் நின்றது என்று அதிர்ச்சி அளித்தார். பேச்சை விடுங்கள்.. அவருக்கு சுயநினைவு இருக்கிறதா என்ற கேள்வியை கூட இன்று நடந்த விவாதம் ஏற்படுத்தி உள்ளது.
3. அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. உடல்நிலை மோசமானது.
4. அவருக்கு மறதி பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 4 நாட்களுக்கு முன் பொது நிகழ்ச்சி ஒன்றில் மனைவி ஜில் பைடன் என்று நினைத்து அதே கலர் உடை அணிந்து இருந்த பெண்ணையே கட்டிப்பிடிக்க சென்றார் பைடன்.
5. இப்படி இருக்க மனைவியே யார் என்று தெரியாதவர் நாட்டை ஆள முடியும் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
கோரிக்கை: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ள அதிபர் ஜோ பைடன், அதிபர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஜனநாயக கட்சியின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க மக்களுக்கும் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ள பைடன், தனது முடிவு தொடர்பாக விரிவாக நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்த உடனேயே, அவரது உடல்நிலை காரணமாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பதவியில் இருந்தும் அவர் விலக வேண்டும் என்று பிரஷர் வைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர், மைக் ஜான்சன் சமூக ஊடக தளமான X இல், ஜனாதிபதி பைடன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக இருந்தால், அவர் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கும் அவர் தகுதி இல்லாதவர்.. உடனே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பைடன் ராஜினாமா செய்யும் பட்சத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் வரை அதிபராக இருக்க வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications