ஜனநாயக கட்சியுடன் இணக்கம்.. சொந்த கட்சியினரால் தூக்கியெறியப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர்!
நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். ஆனால் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பாலியல் குற்றாட்டு தொடங்கி அதிபர் மாளிகையின் ரகசிய ஆவணங்களை வீட்டிற்கு எடுத்து சென்றது வரை பல்வேறு புகார்களுக்கு ஆளாகி நீதிமன்ற படிகளை டிரம்ப் ஏறி வருகிறார்.

கடந்த முறை தேர்தலில் தோல்வியுற்றபோது அவரது ஆதரவாளர்கள் பெரும் கிளர்ச்சியை உருவாக்கினர். வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அமெரிக்க வரலாற்றில் அதுபோன்ற ஒரு போராட்டத்தை நாடு இதற்கு முன்னர் சந்திக்காத வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இப்படி இருக்கையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மெக்கார்த்தி குடியரசு கட்சியை சேர்ந்தவராவார். இப்படி இருக்கையில் இதை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தீர்மானித்த குடியரசு கட்சி எம்பிக்கள் மெக்கார்த்திக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்து அவரை தற்போது பதவி நீக்கம் செய்துள்ளனர். கடந்த 234 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதவும் சொந்தக் கட்சியினரே சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியேற்றியிருப்பது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். வெளியேறும்போது எந்த கருத்துக்களையும் அவர் கூறவில்லை. அவரை யாரும் நம்பாததே இந்த முடிவுக்கு காரணம் என்று குடியரசு கட்சியினர் கூறியுள்ளனர். ஏற்கெனவே அவரது நடவடிக்கைகள் குறிதது பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது அவர் மீதான பதவிநீக்க தீர்மானத்திற்கு முக்கியமான காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications