நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம்ஹூம்.. சிலை மேல ஏறிப் பார்த்துதான் தீர்ப்பு தருவேன்.. அடம் பிடித்த நீதிபதி!

சுதந்திர தேவி சிலை மீது ஏறி பார்த்த பிறகுதான் தீர்ப்பு சொல்வேன் என்றார் நீதிபதி.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ம்ஹூம்.. அதெல்லாம் முடியாது.. சிலை மேல ஏறி பார்த்துட்டுதான் தீர்ப்பு சொல்லுவேன் என்று சுதந்திரதேவி சிலை வழக்கு தொடர்பாக நீதிபதி ஒருவர் அரசிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கி இருக்கிறார்.

அமெரிக்கா என்றாலே நம் கண் முன்னால் வந்து நிற்பது சுதந்திர தேவி சிலைதான். சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி, நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் இந்த சுதந்திர தேவி சிலை பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.

போன வருஷம் ஜுலை மாதம், கோரிக்கை ஒன்றினை வலியுறுத்தி போராட்டம் செய்ய தெரஸா என்ற பெண் இந்த சிலை மீது ஏற முயன்றார். கொஞ்சதூரம்தான் ஏறியிருப்பார்.

போராட்டம்

போராட்டம்

அதற்குள் போலீசார் அவரை பார்த்துவிட்டு, சமாதானப்படுத்தி கீழேயும் இறக்கி விட்டனர். ஆனால் இந்த காட்சியை சில தனியார் டிவிக்கள் ஹெலிகாப்டரில் பறந்தபடியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்தார்கள். இதைதவிர இணையத்திலும் வைரலானது.

நீதிபதி

நீதிபதி

இது சம்பந்தமான வழக்குதான் நியூயார்க் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை கேப்ரியேல் கோரேன்ஸ்டீன் என்ற நீதிபதி விசாரித்து வருகிறார்.

ஆராய வேண்டும்

ஆராய வேண்டும்

அப்போது, "குற்றம் சாட்டப்பட்டவர் சிலையின் மீது என்னென்ன சேதத்தை ஏற்படுத்தினார், எந்தவிதமான ஆபத்தை ஏற்படுத்த முயன்றார் என்பதை எல்லாம் தெளிவாக தெரிய வேண்டும். அதற்கு சிலையின் மீது ஏறி பார்த்து ஆராய்ந்த பிறகுதான் தீர்ப்பு வழங்க முடியும்" என்று நீதிபதி சொல்லிவிட்டார்.

பரபரப்பு

பரபரப்பு

கடைசியில் சிலை மீது ஏற அரசின் அனுமதியையும் வாங்கிவிட்டார். தீர்ப்புக்காக சிலை மீது ஏறுவேன் என்று அடம்பிடிக்கும் நீதிபதியின் செயல்பாடு பெருத்த பரபரப்பை அந்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது.

English summary
US judge climb Statue Liberty before sentencing protester
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X