போகும் முன்.. உலகப்போரை உருவாக்க போகிறார்! பிடனை உடனே பதவியை விட்டு நீக்குங்கள்.. விரைந்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பிடன் 3ம் உலகப்போரை உருவாக்க பார்க்கிறார் என்று அந்நாட்டு குடியரசு கட்சி செனட்டர்கள், பிரதிநிதிகள் புகார் வைத்துள்ளனர். இதன் காரணமாக அவரை பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

உக்ரைன் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தி ரஷ்யாவை தாக்கலாம் என்று பிடன் அனுமதி அளித்தது தவறு. இதன் காரணமாகவே ரஷ்யா அணு ஆயுதங்களை எல்லா நாடுகள் மீதும்.. அதாவது அணு ஆயுதம் இல்லாத நாடுகள் மீதும் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

donald trump vladimir putin ukraine russia war

இதற்கு பிடன்தான் காரணம். இதன் மூலம் ஜோ பிடன் 3ம் உலகப்போரை உருவாக்க பார்க்கிறார் என்று அந்நாட்டு குடியரசு கட்சி செனட்டர்கள், பிரதிநிதிகள் புகார் வைத்துள்ளனர். இதன் காரணமாக அவரை பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் குடியரசு கட்சி செனட்டர்கள், பிரதிநிதிகள் இடையே இது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. பிடனின் ஜனநாயக கட்சியினர் சிலரும் இதை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க அரசியலில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ம் தேதிதான் பதவி ஏற்பார்.

அதற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கு முன்பே பிடனை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளன.

பிடன் எடுத்த முடிவு: அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினின் விமர்சனத்தில், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு உடனடியாக பதிலடி தரப்படும். அமெரிக்காவின் இந்த முடிவு நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது, என்று கூறி உள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கினால் நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்று அர்த்தம் என்று புடின் ஏற்கனேவே கூறி இருந்த நிலையில்தான் பிடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் பிடனின் ஆட்சி காலம் இந்த மாதத்தோடு முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இத்தனை காலமாக.. நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

இதனால் ரஷ்யாவை கடுமையாக தாக்க முடியாமல் உக்ரைன் தவித்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் இனி நீண்ட தூரத்திற்கு செல்லும் ஏவுகணைகளை இனி பயன்படுத்தலாம் என்று பிடன் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது.

சமீபத்தில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசி, உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்.. இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் . அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போன்கால் சுமார் 15 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று இவர் மத்தியசம் பேசி உள்ளார். டிரம்ப் மத்தியசம் பேசியதற்கு இடையே.. தற்போது பிடன் ரஷ்யாவை சீண்டும் விதமாக உக்ரைனுக்கு புதிய பவர் வழங்கி உள்ளார். நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இது ரஷ்யாவை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்போர்: அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+