அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தல்: வெற்றிபெற்ற 2 ஒருபாலினத்தவர்.. புதிய புரட்சியை ஏற்படுத்திய மக்கள்!

அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இரண்டு ஒருபாலின வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இரண்டு ஒருபாலின வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இன்றும் பல மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.

[ரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் சிவசங்கரன் வெளிநாடு தப்பியது எப்படி? வெளியான திடுக் தகவல்]

சிறப்பு

சிறப்பு

இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதில் நிறைய கருப்பின மக்கள் வெற்றியடைந்து இருக்கிறார்கள். அதேபோல் பூர்வ குடி அமெரிக்க ஆண்களும் நிறைய பேர் வென்றுள்ளனர். முதல் பூர்வ குடி அமெரிக்க பெண் ஒருவர் வென்றுள்ளார். அதேபோல் இரண்டு முஸ்லீம் பெண்கள் முதல்முறையாக செனட் சபைக்கு தேர்வாகி உள்ளனர்.

ஒரு பாலின வெற்றியாளர்கள்

ஒரு பாலின வெற்றியாளர்கள்

ஜனநாயக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜாரேட் போலிஸ் இந்த தேர்தலில் கொலராடோ தொகுதியின் கவர்னராக தேர்வாகி உள்ளார். இவர் ஒருபாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் வென்ற முதல் ஒருபாலினத்தவர் இவர்தான்.

லெஸ்பியன்

லெஸ்பியன்

அதேபோல் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷாரிஸ் டேவிட்ஸ் கன்சாஸ் தொகுதியில் பிரதிநிதிகளின் சபையில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றி அடையும் முதல் அமெரிக்க பூர்வ குடி பெண் இவர்தான். இவரும் ஒருபாலினத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

சூப்பர் மக்களே

சூப்பர் மக்களே

இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போதே தங்களின் பாலின தேர்வை வெளிப்படையாக அறிவித்துவிட்டுதான் தேர்தலை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஒரு பாலினத்தவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பிம்பத்தை அமெரிக்க மக்கள் சுக்குநூறாக உடைத்து இருக்கிறார்கள். இந்த தேர்தல் வெற்றி அமெரிக்க தேர்தலில் மிகப்பெரிய புரட்சியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+