நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தல்.. டிரம்ப்பிற்கு தோல்வி.. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை போனது!

அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலில் டிரம்ப்பிற்கு தோல்வி

    நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

    அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 435 பிரதிநிதிகள் சபை தொகுதிகளுக்கான முடிவுகளும், 35 செனட் சபைக்கான முடிவுகளும் வெளியாகி உள்ளது.

    என்ன தேர்தல்

    என்ன தேர்தல்

    அமெரிக்காவில் மிட்-டெர்ம் தேர்தல்கள் என்பது அதிபர் தேர்தல் முடிந்து இரண்டு வருடத்தில் நடத்தப்படும். இதில் 100 பேரில் மூன்றில் ஒருபங்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அமெரிக்க பிரதிநிதிகளின் சபையை சேர்ந்த 435 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது அதிபர் தேர்தலுக்கு சமமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. அதேபோல் 36 கவர்னர்கள் இந்த வருடம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. அதன்படி சட்ட திருத்தங்களை அமல்படுத்த வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இந்த அவையில் மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே திட்டங்களை அமல்படுத்த முடியும். அதிபர் டிரம்பிற்கு இன்னும் 2 வருடங்கள் மிச்சம் இருக்கும் நிலையில் அவருக்கு இந்த உறுப்பினர்களின் தயவு அதிகம் தேவைப்படுகிறது.

    முடிவுகள் வர தொடங்கி உள்ளது

    முடிவுகள் வர தொடங்கி உள்ளது

    இந்த நிலையில் தற்போது இந்த மிட்-டெர்ம் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த முடிவுகளின் படி, சென்ட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சி மெஜாரிட்டி பெற்றுள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. அங்கு டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    சென்ட் சபை

    சென்ட் சபை

    35 செனட் சபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் அமெரிக்காவில் 100 சென்ட் சபை இடங்கள் உள்ளது. அந்த 100 இடங்களில் தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 45 இடங்களையும் , டிரம்பின் குடியரசுக் கட்சி 51 இடங்களை பிடித்து இருக்கிறது. சென்ட் தேர்தல் முடிவுகள் டிரம்பிற்கு ஆதரவாக வந்துள்ளது.

    என்ன நிலை

    என்ன நிலை

    ஆனால் இப்போது வரை வந்த முடிவுகளில் டிரம்பின் குடியரசுக் கட்சி அமெரிக்க பிரதிநிதிகளின் சபையில் பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றி அடைந்துள்ளது. மொத்தம் அமெரிக்க பிரதிநிதிகளின் சபையை சேர்ந்த 435 உறுப்பினர்களுக்கு இந்த தேர்தல் நடந்தது. இதில் 218 உறுப்பினர்களின் பலம் பெரும் கட்சி மெஜாரிட்டி பெரும். அதன்படி எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 222 இடங்களில் வென்று மெஜாரிட்டி பெற்று இருக்கிறது. டிரம்பின் குடியரசுக் கட்சி 199 இடங்களை பிடித்து மெஜாரிட்டியை இழந்து இருக்கிறது. அமெரிக்க பிரதிநிதிகளின் சபை தேர்தல் முடிவுகள் டிரம்பிற்கு எதிராக வந்துள்ளது.

    English summary
    US Mid Term elections: Trump stands with no hope as results are coming out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X