அச்சம்.. பீதி.. கமலாவிற்கு பிடன் தந்த "TASK".. உக்ரைன் எல்லைக்கு பறக்கும் VP! அமெரிக்கா பரபர பிளான்
நியூயார்க்: உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு முக்கியமாக டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மட்டுமே போர் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. மீட்பு பணிகளுக்காக போர் சில மணி நேரங்கள் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் இன்று காலையில் போர் முழு வீச்சாக மீண்டும் தொடங்கியது.
கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களில் இப்போது போர் மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் அணு மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தனது படைகளை நகர்த்தி வருகிறது.

கடந்த வாரம் ஜெர்மனி
இந்த போர் தொடங்கும் முன்பே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனி சென்று இருந்தார். அங்கு முனிச்சில் ரஷ்ய போர் குறித்தும், ஐரோப்பா நாடுகளின் பாதுகாப்பு குறித்தும் இவர் ஆலோசனை செய்தார். அமெரிக்க உளவுத்துறைக்கு ரஷ்ய போர் பற்றி முன்பே தகவல் வந்துவிட்டது. இதையடுத்தே கமலா ஹாரிஸ் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வடக்கு ஐரோப்பா நாடுகளுக்கு கமலா ஹாரிஸ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

வடக்கு ஐரோப்பா நாடுகள்
வடக்கு ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளையும், ரஷ்யாவிற்கு அருகே இருக்கும் சோவியத் நாடுகளையும் குறி வைத்து இந்த பயணத்தை கமலா ஹாரிஸ் மேற்கொள்ள இருக்கிறார். அடுத்த வாரம் இந்த பயணம் நடைபெற உள்ளது. ரஷ்ய போரால் அமெரிக்கா - ஐரோப்பா உறவில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ரஷ்யாவின் போர் காரணமாக பாதுகாப்பு ரீதியாக நேட்டோ நாடுகளுக்கும், ஐரோப்பாவிற்கும் பாதுகாப்பு ரீதியாக அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கமலா ஹாரிஸ் மூலம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு நாடுகள்
இந்த பயணம் முக்கியமாக இரண்டு நாடுகளை குறி வைத்து கமலா ஹாரிஸ் மூலம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி போலந்து, ரோமானியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு கமலா ஹாரிஸ் செல்கிறார். இந்த இரண்டு நாடுகளும் ரஷ்யாவிற்கு மிக மிக அருகில் இருக்கும் நேட்டோ நாடுகள் ஆகும். இப்போது உக்ரைன் போர் காரணமாக இந்த இரண்டு நாடுகளும் கொஞ்சம் பதற்றத்தில் இருக்கின்றன. உக்ரைனை பிடித்த பின் எங்கே தங்களை ரஷ்யா தாக்குமோ என்ற அச்சம் இரண்டு நாடுகளுக்கும் உள்ளது.

அதிர்ச்சியில் உள்ளன
அதேபோல் ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை நேட்டோவில் சேர கூடாது என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக இந்த நான்கு நாடுகளிடம் கொஞ்சம் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏற்கனவே இங்கு ரோமானியா, போலந்து நாட்டில் நேட்டோ படைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனாலும் ரஷ்யாவின் போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டதால் இந்த நாடுகள் ஒரு விதமான பதற்றத்தில் உள்ளன.

குடியரசு கட்சி விமர்சனம்
இந்த நிலையில்தான் ரோமானியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு கமலா ஹாரிஸை பிடன் அனுப்பி உள்ளார். நேட்டோ படைகள் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இன்னொரு பக்கம் வடக்கு ஐரோப்பா நாடுகள் இடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் கமலா ஹாரிஸ் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். அதே சமயம் இதற்கு முன் கமலா ஹாரிஸ் இதுவரை தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் எதையும் சரியாக நிறைவேற்றவில்லை. அவரை ஏன் இங்கே அனுப்புகிறீர்கள் என்று குடியரசு கட்சி செனட்டர்கள் பல விமர்சனம் வைத்து உள்ளன.

மறைமுக மெசேஜ்
இந்த பயணம் ரஷ்யாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் மறைமுக மெசேஜ் என்றும் கூறுகிறார்கள். நேட்டோ படைகளுடன் நாங்கள் இருக்கும். ரோமானியா, போலந்து வேண்டுமெனால் உக்ரைன் அருகே இருக்கலாம். ஆனால் அவை நேட்டோ நாடுகள். அவற்றை தாக்கும் எண்ணம் ரஷ்யாவிற்கு வர கூடாது என்று மெசேஜ் அனுப்பும் விதமாக கமலா ஹாரிஸின் இந்த பயணம் அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications