இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரி.. அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்த திடீர் ‘செக்’ பின்னணி
நியூ யார்க்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களுக்கு வரி எதுவும் கிடையாது என அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடிகளுக்கு பஞ்சமின்றி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய டிரம்ப் அதிரடியாக பல்வேறு நாடுகள் மீது வரியை விதித்து வருகிறார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும்?
ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். இதனால், சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தக போர் என்பது உலகப்போர் போல ஆயுதங்களை பயன்படுத்தும் போர் அல்ல.. இதனால் நேரடியாக உயிர் இழப்புகள் ஏற்படாது. ஆனால் கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆயுத போர் மூலம் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு சற்றும் சளைக்காத அளவுக்கு வர்த்தக போராலும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. மற்றொரு பக்கம் சீனாவோ, அமெரிக்காவுடன் மோத தயார் என்ற ரீதியில் பேசி வருகிறது. பொருளாதார போர் உள்பட எந்த வகையான போருக்கும் ரெடி எனக் கூறிய சீனா, அமெரிக்காவுடன் மல்லுக்கட்ட தயாராக இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளது.
இந்தியா நேரடியாக பாதிக்கப்படும்
இதனால், வரும் நாட்களில் பொருளாதார ரீதியாக என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. பரஸ்பர விதிகள் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த இறக்குமதி வரி விதிப்பு, அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளுக்கு மேலும் நெருக்கடியை கொடுப்பதாக அமைந்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் கூறியதாவது:-
25 சதவிகித வரி
"அமெரிக்காவில் தயாரிக்கப்படாத அனைத்து வகையான கார்களுக்கும் 25 சதவீத வரியை விதிக்க போகிறோம். அவர்கள் அமெரிக்காவில் கார்களை தயாரித்தால் வரியே கிடையாது" என்றார். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனையாகும் வெளிநாட்டு கார்கள் மற்றும் டிரக்குகள் ஆகியவற்றுக்கு பெரிய அடியாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
டிரைவர் மறந்தாலும் தானாக பிரேக் பிடிக்கும்! கார்களில் புதிய தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு அனுமதி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications