சத்தமே இல்லாமல்.. டிரம்ப் என்ன பண்ணுறாரு பாருங்க.. இதுதான் மாஸ்டர் டீலிங்.. பிஸ்னஸ் மேன்னா சும்மாவா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் டிக்டாக் தொடர்பாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் கவனம் பெற்றுள்ளன.

அமெரிக்காவில் TikTok தடை செய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டிக்டாக் தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் செயலியைத் தடை செய்யும் சட்டம் தயாராக உள்ளது. ஆனால் டிரம்ப் வருகை காரணமாக டிக்டாக் தற்காலிமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

tiktok usa

இந்த டிக்டாக் செயலி மீது கடுமையான சில புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தின் கீழ் இருப்பதால் அமெரிக்காவில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பைட்டான்ஸ் நிறுவனம் அந்நாட்டு அரசின் proxy நிறுவனம் என்ற புகார் உள்ளது.

அதாவது பைட்டான்ஸ் நிறுவனம் சீனாவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இவர்கள் உலகம் முழுக்க மக்களின் டேட்டாவை எடுக்கிறார்கள். இதன் மூலம் சீனா மக்களை கட்டுப்படுத்துகிறது. தங்களின் பொருட்களை விற்கிறது. அதோடு இல்லாமல் பல ரகசிய தகவல்களை கூட திரட்டுகிறது என்று புகார் உள்ளது. ஏற்கனவே அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ தளவாடகங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது.

உலகம் முழுக்க பல ராணுவத்தில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது. இந்த நிலையில்தான் அதிபர் பிடன் ஆதரவோடு அமெரிக்காவில் இந்த செயலியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அந்த செயலியை பயன்படுத்த முடியாது. அதேபோல் புதிதாக டவுன்லோட் செய்யவும் முடியாது. ஆனால் இதை எல்லாம் டிரம்ப் வந்ததும் நீக்கினார்.

டிரம்ப் மீட்டிங்

அமெரிக்காவில் டிக்டாக் தொடர்பாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் கவனம் பெற்றுள்ளன. அதன்படி டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்காவின் oracle நிறுவனம் உட்பட ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு விற்க டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

அமெரிக்காவை சேர்ந்த 5 நிறுவனங்களுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அமெரிக்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உங்கள் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவை மாற்றுங்கள். அப்படி மாற்றவில்லை என்றால் உங்கள் டிக்டாக் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தடை:

உலகம் முழுக்க இந்தியா தவிர பல நாடுகளில் டிக்டாக் மிகவும் பிரபலமாக உள்ளது. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன. அமெரிக்காவே கிட்டத்தட்ட டிக்டாக் செயலிக்கு அடிமையாகி உள்ளது.

அதன்படி டிக்டாக் செயலியை அங்கே வீடியோ போட மட்டுமின்றி தங்களின் பிஸ்னஸ் வேலைகளுக்கு, பொருட்களை விற்க, வகுப்புகளை எடுக்க கூட பயன்படுத்துகின்றனர். நம்ம ஊரில் எப்படி இன்ஸ்ட்டா ரீல்ஸ் இருக்கிறதோ அப்படித்தான் அமெரிக்காவில் டிக்டாக் இருக்கிறது. நம்ம ஊரில் இவங்க தலைக்கட்டு என்றால்.. அந்த ஊரில் அவங்க தலைக்கட்டு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+