சிவப்பு கோட்டையில் நீல பெயிண்ட் அடித்த பிடன்.. பென்சில்வேனியா, ஜார்ஜியாவில் திருப்பம்.. டிரம்ப் ஷாக்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிதும் நம்பி இருந்த பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் 160 மில்லியன் வாக்குகள் பதிவானது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறை இவ்வளவு வாக்குகள் ஒரே தேர்தலில் பதிவாகி உள்ளது. அதிலும் 101 மில்லியன் வாக்குகள் தபால் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாக்குகளை எண்ணும் பணி தாமதமாகி வருகிறது.

என்ன

என்ன

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிதும் நம்பி இருந்த பென்சில்வேனியா, ஜார்ஜியாவில் மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த இரண்டு மாகாணங்களிலும் கடந்த தேர்தலில் டிரம்ப்தான் வெற்றிபெற்றார். இதில் பென்சில்வேனியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம் என்றாலும்.. கடந்த தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்பிற்கு வாக்களித்தது.

ஆனால்

ஆனால்

ஆனால் இந்த முறை மீண்டும் நிலைமை மாறி உள்ளது. இந்த முறை மீண்டும் பென்சில்வேனியா ஜனநாயக கட்சி வசம் சென்றுள்ளது.பென்சில்வேனியாவில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிடன் முன்னிலை வகித்து வருகிறார். முதலில் பின்னடைவை சந்தித்த இவர், போக போக தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்க தொடங்கினார். நேற்று பென்சில்வேனியாவில் முன்னிலை பெற்றவர்.. தொடர்ந்து அங்கு வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

அதிபராக முடியும்

அதிபராக முடியும்

பென்சில்வேனியாவில் வென்றால் பிடனுக்கு 20 எலக்ட்ரல் வாக்குகள் கிடைக்கும். பென்சில்வேனியாவில் வெற்றி பெற்றால் பிடன் அதிபராக முடியும். அங்கு பிடன் 3324151 மக்கள் வாக்குகளை வென்றுள்ளார். டிரம்ப் 3304619 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இன்னொரு பக்கம் ஜார்ஜியாவில் பிடன் 4 ஆயிரம் மக்கள் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஜார்ஜியா

ஜார்ஜியா

1992ல் இருந்து குடியரசு கட்சியின் கோட்டையாக திகழும் ஜார்ஜியாவிலும் தற்போது டிரம்பை பிடன் முந்தியுள்ளார். ஜார்ஜியாவில் பிடன் 2456597 மக்கள் வாக்குகளை வென்றுள்ளார். டிரம்ப் 2452626 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால் இங்கும் பிடன் வெற்றிபெற வாய்ப்புள்ளது.இங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.. ஆனால் அதிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்கிறார்கள்.

அதிரடி

அதிரடி

இதன் மூலம் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியின் ஆஸ்தான கோட்டையான விஸ்கான்சின், மிச்சிகன், ஜார்ஜியா.. கடந்த முறை வென்ற பென்சில்வேனியா ஆகியவற்றை பிடன் கைப்பற்ற உள்ளார். இன்னொரு பக்கம் அரிசோனாவிலும் பிடன் வென்றுவிட்டார் .டிரம்பிற்கும், குடியரசு கட்சிக்கும் இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+