அமெரிக்க அதிபர் தேர்தல்.. 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கிய பிடன்.. டிரம்ப்பிற்கு கடும் பின்னடைவு!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். தற்போது பிடன் வெற்றிபெற இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவை.

எப்படி
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் பிடன் வென்றதால் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு நெருக்கமான போட்டி நிலவி வந்த நிலையில்.. கடைசி கட்டத்தில் இங்கு இருக்கும் எலக்ட்ரல் வாக்குகள் பிடனுக்கு கிடைத்தது. இதனால் அவர் முன்னிலை வகிக்கிறார். ஜார்ஜியா, நார்த் கரோலினா, பென்சில்வேனியாவில் டிரம்ப் நூலிழையில் முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னிலை
இதில் நார்த் கரோலினா, பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த மாகாணங்கள் பாரம்பரியமான ஜனநாயக கட்சி மாகாணங்கள் ஆகும். இதன் காரணமாக பிடன் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 50.3% (71,452,650) மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார் ஜோ பிடன், 48% (68,223,592) மக்கள் வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார்.

தேர்தல்
அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை விட.. எலக்ட்ரல் வாக்குகள்தான் அதிபரை தேர்வு செய்யும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை பொறுத்து எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 53 பிரதிநிதிகள் மற்றும் 2 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அங்கு மொத்தம் 55 எலக்டர்ஸ் உள்ளனர்.

வெற்றி
மொத்தமாக ஒரு மாகாணத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக மக்கள் வாக்கு வருகிறதோ.. அங்கு இருக்கும் அனைத்து எலக்டர்ஸ் வாக்குகளும் அந்த குறிப்பிட்ட அதிபர் வேட்பாளருக்கே வழங்கப்படும். உதாரணமாக கலிபோனியாவில் பிடன் 51% மக்கள் வாக்குகளை வென்று டிரம்ப் 49 % வாக்குகளை வென்றால்.. மொத்தமாக கலிபோனியார்னியாவில் உள்ள 55 எலக்டர்ஸ் வாக்குகளும் பிடனுக்கே வழங்கப்படும்.

அறிவிப்பு
மொத்தமாக பிடன் அங்கு வென்றதாக அறிவிக்கப்படும்.இப்படி முக்கியமான மாகாணங்களில் எல்லாம் பிடன் வென்று இருக்கிறார். இதன் காரணமாகவே தற்போது பிடன் மொத்த எலக்டர்ஸ் வாக்குகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்.

யார் பெரும்பான்மை
மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். பெரும்பாலும் மக்கள் அதிகம் வாக்களிக்கும் வேட்பாளருக்கே எலக்ட்ரல் வாக்குகளும் அதிகம் விழும் என்பதால் இந்த முறை ஜோ பிடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications