அமெரிக்க தேர்தல்.. பிரதிநிதிகள் சபையை கைப்பற்றும் பிடன்.. செனட் சபைக்கு இதுவரை இல்லாத போட்டி!
நியூயார்க்: அமெரிக்கா காங்கிரஸ் அவை தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. செனட் சபைக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்காவில் இருக்கும் 50 மாகாணங்களிலும் தற்போது வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுடன் அங்கு காங்கிரஸ் சபைக்கான தேர்தலும் நடந்து உள்ளது. அதோடு பல சிறிய சிறிய கவுண்டி பதவிகளுக்கான தேர்தல்கள் நடந்து உள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. அமெரிக்கா காங்கிரஸ் அவை தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. செனட் சபைக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் நாடாளுமன்ற சபை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளது. ஒன்று செனட் இன்னொன்று பிரதிநிதிகள் சபை. இங்கு மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது செனட் சபையில் 100 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல் பிரதிநிதிகள் சபையில் 435 பிரதிநிதிகள் உள்ளனர்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 பேர் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிதிகள் உள்ளனர். காங்கிரஸ் அவையில் பிரதிநிதிகளை 2 வருடங்களுக்கு ஒருமுறையும், செனடர்களை 6 வருடங்களுக்கு ஒருமுறையும் தேர்வு செய்வார்கள்.
காங்கிரஸ் அவையில் எந்த கட்சி எவ்வளவு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே இனி வரும் நாட்களில் சட்டங்களை இயற்ற முடியும். இந்த நிலையில் தற்போது நடந்துள்ள காங்கிரஸ் அவை தேர்தலில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.
செனட் சபைக்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
செனட் சபை: ஜனநாயக கட்சி 48 இடங்களில் வெற்றி, குடியரசு கட்சி 48 இடங்களில் வெற்றி
செனட் சபையில் பெரும்பான்மை பெற 51 இடங்கள் தேவை
பிரதிநிதிகள் சபை: ஜனநாயக கட்சி 204 இடங்களில் வெற்றி, குடியரசு கட்சி 190 இடங்களில் வெற்றி
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications